தமிழ் நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ள பல ரகமான அரிசிகள் தற்போது இலங்கையின் தேசிய சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வருவதாக தெரியவருகிறது.
இந்த அரிசிகள் உள்நாட்டு அரிசியை விட மிக குறைந்த விலையில் விற்பனை செய்யப்பட்டு வருவதால், மக்கள் அதிகளவில் தமிழகத்தில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ள அரிசியை கொள்வனவு செய்து வருகின்றனர்.
தமிழகத்தில் இருந்து பொன்னி போன்ற உயர் ரக அரிசிகளை இலங்கை அரிசி வர்த்தகர்கள் இறக்குமதி செய்து விநியோகித்து வருகின்றனர்.
இலங்கையில் இரசாயன பசளைகளுக்கு தடைவிதிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்ததன் காரணமாக உள்நாட்டில் நெல் அறுவடை குறைந்துள்ளதுடன் உள்நாட்டு அரிசிகளின் விலைகள் அதிகரித்துள்ளன