இலங்கையின் 75வது சுதந்திர தினம் இன்று நாட்டின் பல பாகங்களிலும் இடம்பெற்று வருகின்றது.
அதேவேளை தேசிய சுதந்திர தின நிகழ்வு இன்று காலை காலிமுகத்திடல் பகுதியில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இடம்பெற்றது.
முப்படைகளின் அணிவகுப்புக்களுடன் இடம்பெற்ற சுதந்திர தின நிகழ்வில் பிரதமர், அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சுக்களின் முக்கியஸ்தர்கள், அரச ஊழியர்கள் மற்றும் வெளிநாட்டு இராஜதந்திரிகளும் பங்கேற்றனர்.
இந்நிலையில் விசேட அம்சமாக சுதந்திர தின நிகழ்வில் தமிழிலும் தேசிய கீதம் இசைக்கப்பட்டது.
கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் காலப்பகுதியில் இடம்பெற்ற சுதந்திரதின நிகழ்வுகளில் தமிழில் தேசிய கீதம் இசைக்கப்பட்டு வந்ததுடன் முன்னாள் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் தமிழ் மொழியிலான தேசிய கீதம் புறக்கணிக்கப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.