இலங்கையர்கள் ஒரு அமைதியான, நிலையான நாட்டில் வாழும் தகுதி பெற்றவர்கள் என கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.
இலங்கையில் உள்நாட்டு போர் முடிந்து 13 ஆண்டு கடந்துள்ள நிலையில், அது குறித்து டிவிட்டரில் பதிவிட்டுள்ள பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ,
தமிழர்கள் உட்பட இலங்கை மக்கள் அனைவரும் பாதுகாப்பான, அமைதியான மற்றும் நிலையான ஒரு நாட்டில் வாழும் தகுதி பெற்றவர்கள் இலங்கையில் போரால் ஏற்பட்ட வேதனை, அதிர்ச்சி மற்றும் இழப்புடன் தொடர்ந்து வாழும் குடும்பங்களுக்கு தனது ஆறுதலைத் தெரிவிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், இந்த ஆண்டில் தற்போதைய பொருளாதார மற்றும் அரசியல் பிரச்சினைகளால் தொடர்ந்து மக்கள் அவதியுறுவது கவலையை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.மக்கள் தங்களுடைய எதிர்ப்பைத் தெரிவிப்பதற்கும், தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்துவதற்குமான உரிமைகளுக்கு மதிப்பளிப்பதை இலங்கை அரசாங்கம் உறுதி செய்யவேண்டும் எனவும் பிரதமர் ட்ரூடோ வலியுறுத்தியுள்ளார்.
அதேசமயம் வன்முறையைக் கையில் எடுக்கவேண்டாம் என அனைத்துக் கட்சிகளையும் தாங்கள் கேட்டுக்கொள்வதாகவும் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.