மக்கள் வங்கியுடனான தமது கணக்குகளை மூடுவதற்கு எந்தவொரு அரச நிறுவனத்திடம் இருந்தும் கோரிக்கைகள் அல்லது அறிவுறுத்தல்கள் எதுவும் கிடைக்கவில்லை என குறித்த வங்கி அறிவித்துள்ளது.
குறித்த அறிவிப்பை இன்றைய தினம் (17-03-2023) மக்கள் வங்கி வெளியிட்டுள்ளது.
இந்த அறிவிப்பை அரச நிறுவனங்களின் வங்கிக் கணக்குகள் தொடர்பான தவறான செய்திகளை தெளிவுபடுத்தும் வகையில் மக்கள் வங்கி வெளியிட்டுள்ளது.
மேலும், அனைத்து பொது மற்றும் தனியார் துறை வாடிக்கையாளர்களின் நிதித் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு மக்கள் வங்கி நன்கு வசதிகளைக் கொண்டுள்ளது