இலங்கையில் உள்ள கொழும்பு துறைமுகத்திற்கு நேற்றையதினம் (21-03-2024) Shell-RM Parks நிறுவனத்திற்கு சொந்தமான முதலாவது எரிபொருள் கப்பல் ஒன்று வந்தடைந்துள்ளது.
இதன்படி, இலங்கையில் இன்று (22-03-2024) முதல் 150 எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மூலம் Shell-RM Parks நிறுவனத்திற்கு சொந்தமான எரிபொருள் விற்பனை ஆரம்பிக்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.
Shell-RM Parks நிறுவனம் இலங்கையில் இருந்து அகற்றி சிங்கப்பூரில் ஆரம்பித்து நேற்று அந்நாட்டில் மிகப்பெரும் நிறுவனமாக வளர்ச்சியடைந்துள்ளது.
இதனையடுத்து, 63 வருடங்களின் பின்னர், ஷெல் நிறுவனம் இலங்கையின் எரிசக்தி துறையில் மீண்டும் இணைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.