சீனாவில் ஆரம்பப் பாடசாலை மாணவர்கள் குழுவொன்று இலங்கைக்கு நிதி உதவியளித்துள்ளனர்.
ஹாங்சோவில் உள்ள மாணவர்கள் தங்களுடைய சேகரிப்பை நன்கொடையாக அனுப்பியதாக சீன தூதரகம் தெரிவித்துள்ளது.
இலங்கையிலுள்ள குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த 1000 பிள்ளைகளின் கல்விக்காக 5 மில்லியன் ரூபாவை நன்கொடையாக வழங்கியுள்ளதாக தூதரகம் டுவிட்டரில் தெரிவித்துள்ளது.
இதன்படி மாணவர்களால் நன்கொடையாக வழங்கப்பட்ட பணத்தை உள்ளடக்கிய பொதியானது, இன்று இலங்கை எதிர்நோக்கும் சிரமங்களை சமாளிக்கும் என நம்புகிறது.