இலங்கைக்கு கடன்வழங்கிய நாடுகள் கூடிய விரைவில் கடன்மறுசீரமைப்பு நடவடிக்கைகளை பூர்த்திசெய்யவேண்டும் என அமெரிக்காவின் திறைசேரி செயலாளர் ஜனெட் யெலென் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
புதிய உலகளாவிய நிதி உடன்படிக்கை குறித்த சர்வதேச மாநாட்டில் இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை அவர் சந்தித்துள்ளார் .
இதன்போது இலங்கைக்கான சர்வதேச நாணயநிதியத்தின் உதவி கிடைத்துள்ளமை தனக்கு மகிழ்ச்சியளித்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
அதேசமயம் , இலங்கையில் சீர்திருத்தம் தொடர்பில் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளை அமெரிக்காவின் திறைசேரி செயலாளர் ஜனெட் யெலென் பாராட்டியுள்ளார்.