சீன கடற்படை பயிற்சிக் கப்பலான, PLANS Po Lang, அதன் பயிற்சிப் பணியின் ஒரு பகுதியாக இலங்கைக்கு வரவுள்ளது.
சீனாவின் தேசிய பாதுகாப்பு அமைச்சகத்தின் பேச்சாளர் கேர்னல் ஜாங் சியாவோங்கின் அறிக்கையின்படி, 2024 ஆகஸ்ட் நடுப்பகுதியிலிருந்து நவம்பர் பிற்பகுதிக்கு இடையில் இந்த விஜயம் திட்டமிடப்பட்டுள்ளது.
வியட்நாம், இந்தோனேசியா, சிங்கப்பூர் மற்றும் ஹொங்காங்கில் தொழில்நுட்ப நிறுத்தம் ஆகியவற்றை உள்ளடக்கிய இந்த பயிற்சி, தொழில்முறை திறன்களை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த பயணம் இரண்டு நாடுகளின் கடற்படைகளுக்கு இடையே பரிமாற்றங்கள், ஒத்துழைப்பு மற்றும் பரஸ்பர நம்பிக்கையை வலுப்படுத்த முயல்கிறது.
அத்துடன் எதிர்கால கடல்சார் சமூகத்தைக் கட்டியெழுப்புவதற்கு சீனாவின் பரந்த முயற்சியின் ஒரு பகுதியாகும் என்று பாதுகாப்பு அமைச்சின் பேச்சாளர் வலியுறுத்தியுள்ளார்.