இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையானது நிலையான வைப்பு வசதி வீதம் மற்றும் நிலையான கடன் வசதி வீதத்தை அதிகரித்துள்ளதாக கூறியுள்ளது.
அதன்படி நிலையான வைப்பு வசதி வீதத்தை 13.50% ஆகவும், நிலையான கடன் வசதி வீதத்தை 14.50% ஆகவும் அதிகரித்துள்ளதாக மத்திய வங்கி அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.
மேலும் நாட்டின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட் டதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.