கடந்த 2022 ஆம் ஆண்டு இலங்கை ரூபாவின் பெறுமதி கணிசமான அளவில் வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
அதன்படி, அமெரிக்க டொலுக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி 44.8% ஆகவும், யூரோவுக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி 41.4% ஆகவும், இந்திய ரூபாவுக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி 38.6 சதவீதமாகவும், ஸ்ரேலிண் பவுனுக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி 38.1 % ஆகவும் மற்றும் ஜப்பான் யென்னுக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி 36.4 சதவீதமாகவும் பதிவாகியுள்ளதாக மத்திய வங்கி அறிவித்துள்ளது.