எதிர்வரும் சில வாரங்களில் சமையல் எரிவாயு தட்டுப்பாட்டை நிவர்த்திக்க முடியும் என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
நாளாந்தம் பெருந்தொகையான சமையல் எரிவாயு கொள்கலன்கள் சந்தைக்கு விநியோகிக்கப்படுவதாக அந்த நிறுவனத்தின் தலைவர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
சமையல் எரிவாயு வாடிக்கையாளர்களில் பெரும்பாலானோர் நகர பகுதிகளிலே இருக்கின்றனர். இதன்காரணமாக நகர பகுதிகளுக்கான சமையல் எரிவாயு விநியோகத்திற்கு முன்னுரிமை அளிப்பதாக லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, சமையல் எரிவாயு தாங்கிய மேலும் ஒரு கப்பல் நாட்டை வந்தடைந்துள்ளது. அந்த கப்பலில் சுமார் 3,500 மெற்றிக் டன் சமையல் எரிவாயு அடங்கியிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.