சீனாவினால் வழங்கப்பட்ட மருந்துத் தொகுதி ஒன்று நாளை இலங்கைக்கு வரவுள்ளதாக கொழும்பில் உள்ள சீனத் தூதரகம் தெரிவித்துள்ளது.
இதன் மதிப்பு சுமார் 500 மில்லியன் யுவான் என சீன தூதரகம் டுவிட்டர்யில் தெரிவித்துள்ளது. இந்த மருந்துகள் 2 கட்டங்களாக இலங்கையை வந்தடையவுள்ளன.
அதன் முதல் தொகுப்பில் 10 மில்லியன் யுவான் மதிப்புள்ள Enoxaparin Sodium ஊசிகள் 256,320 உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இரண்டாவது மருந்துத் தொகுதி இம்மாத நடுப்பகுதியில் இலங்கையை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.