நாட்டில் அண்மைக்காலமாக ஏற்பட்டுள்ள பொருளாதாரம் மட்டும் டொலர் நெருக்கடியால் மக்கள் பெரும் சிரமங்களுக்கு உள்ளாகியுள்ளார்.
இந்த நிலையில், கடந்த இரண்டு வாரங்களாக அரசாங்கத்திற்கு எதிராக நாடு தழுவிய ரீதியில் மக்கள் பல்வேறு ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதேவேளை அரசாங்கத்திற்கு எதிராக போராட்டம் கடந்த சில தினங்களாக உக்கிரமடைந்து வருவதால் பொலிஸார் பல்வேறு நடவடிக்கையில் முன்னெடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், நேற்றைய தினம் (06-05-2022) கொழும்பில் இடம்பெற்ற பாரிய ஆர்ப்பாட்டத்தின்போது பொலிஸார் கண்ணீர் புகைக்குண்டுகளை வீசி போராட்டக்காரர்களை கலைக்க முற்பட்டனர்.
பொலிஸார் கண்ணீர் புகைக்குண்டு வீசியதில் பெண்ணொருவர் பாதிக்கப்பட்ட நிலையில் அவரை நபரொருவர் தூக்கி செல்லும் புகைப்படம் ஒன்று சமூக ஊடக பக்கத்தில் வெளியாகி கலங்கடித்து வருகின்றது.