மேல் மாகாணத்தில் அமைந்துள்ள அனைத்து அரச பாடசாலைகளும் நாளை திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேல் மாகாண கல்விப் பணிப்பாளர் இந்த விடயத்தை அறிவித்துள்ளார். நாளை முதல் வழைமையான முறையில் பாடசாலைகள் இயங்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, கடந்த வாரம் அமுல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கு உத்தரவு காரணமாக மேல் மாகாண பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை நாட்டிலுள்ள அனைத்து பாடசாலைகளினதும் கல்வி நடவடிக்கைகள் நாளை முதல் மீண்டும் ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு O/L பரீட்சையுடன் தொடர்புடைய மேலதிக வகுப்புகள் மற்றும் கருத்தரங்குகள் நாளை நள்ளிரவு முதல் தடை செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.