நியோனா என்ற இலவச இதய சத்திரசிகிச்சை திட்டத்தின் கீழ், பிறவி இதயக் குறைபாடுகளுடன் பிறந்த கொழும்பைச் சேர்ந்த ஐந்து குழந்தைகளுக்கு கொச்சினில் வெற்றிகரமாக இதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அறுவை சிகிச்சை
ரோட்டரி அறக்கட்டளையின் உதவியுடன் ரோட்டரி கிளப் ஆஃப் கொச்சின் வெஸ்ட் மற்றும் ரோட்டரி கிளப் ஆஃப் கொழும்பு வெஸ்ட் இணைந்து செயல்படுத்திய திட்டத்தின் கீழ், மேற்குறிப்பிட்ட 5 குழந்தைகளுக்கு சமீபத்தில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நியோனா என்பது இலங்கையின் கொழும்பில் பிறவி இதய குறைபாடுகள் உள்ள குழந்தைகளுக்கான இலவச இதய அறுவை சிகிச்சை திட்டமாகும். கொச்சினில் உள்ள அமிர்தா மருத்துவ அறிவியல் மற்றும் ஆராய்ச்சி மையத்தில் இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.