இலங்கையை நண்பனாகவும் பங்காளியாகவும் அபிவிருத்தி செய்வதற்கு சீனா எப்போதும் ஆதரவளிக்கும் என வெளிநாட்டு நாடுகளுடனான நட்புறவுக்கான சீன மக்கள் சங்கத்தின் தலைவர் லின் சோங்டியன்(Lin Songtian) தெரிவித்துள்ளார்.
இலங்கையில் தொன்மையான நாகரீகம்
அத்துடன் இலங்கையில் தொன்மையான நாகரீகம் இருப்பதையிட்டு சீனா பெருமை கொள்கிறதாகவும் அவர் குறிப்பிட்டார். “நாங்கள் எப்பொழுதும் ஒன்றுபடுகிறோம்.
நாங்கள் எப்போதும் ஒன்றாகவே சிந்திக்கிறோம் என தெரிவித்த அவர் (Lin Songtian), இலங்கைக்கான தனது விஜயம் இலங்கை தேசத்துடன் புதிய பங்காளித்துவங்களை வளர்ப்பதே எனவும் கூறினார்.
தனது இலங்கை விஜயத்தின் போது , தாமரை கோபுரம் , கொழும்பு துறைமுக நகரம் என்பவற்றை சுற்றிப்பார்த்ததாக தெரிவித்த லின் சோங்டியன் (Lin Songtian), இது இந்த நாட்டின் நம்பிக்கையாக இருப்பதால் இது ஊக்கமளிப்பதுடன், இது தங்களுக்கு நம்பிக்கையை அளிக்கிறதாகவும் தெரிவித்தார்.