இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவர் தசுன் ஷானக எதிர்வரும் உலகக் கிண்ணத்தை வெல்வதே தனது அடுத்த இலக்கு என தெரிவித்துள்ளார்.
தசுன் ஷானக தலைமையிலான இலங்கை அணி 8 வருடங்களின் பின்னர் ஆறாவது தடவையாக ஆசிய கிண்ண கிரிக்கட் சாம்பியன் பட்டத்தை நேற்று (11) கைப்பற்றியது.
டுபாய் மைதானத்தில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் அணியை 23 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆசிய கிண்ண கிரிக்கட் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.