ரி20 உலகக் கிண்ண சுற்றுப்பயணத்தில் இணைந்து கொண்ட இலங்கை கிரிக்கெட் அணி தொடர்பில் வெளியான சர்ச்சைக்குரிய செய்தி தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட விசாரணைக் குழுவின் அறிக்கை இன்று (10) அமைச்சரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி குசலா சரோஜனி வீரவர்தன தலைமையில் ஐவர் அடங்கிய விசாரணைக் குழுவை அமைச்சர் நியமித்தார்.
நிதி துஷ்பிரயோகம், சமூக ஊடகங்களின் செல்வாக்கு, மதப் பிரிவினரின் செல்வாக்கு உள்ளிட்ட பல முக்கிய விடயங்கள் குழுவின் அறிக்கையில் குறிப்பாக குறிப்பிடப்பட்டுள்ளதாக விளையாட்டு அமைச்சகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
முன்னாள் அமைச்சின் செயலாளர் கிங்ஸ்லி பெர்னாண்டோ, ஓய்வுபெற்ற பிரதி பொலிஸ் மா அதிபர் சுதத் நாகஹமுல்ல, ஓய்வுபெற்ற றியாட் அட்மிரல் ஆனந்த பீரிஸ், முன்னாள் கிரிக்கெட் வீரர் நலிந்த அல்விஸ், சட்டத்தரணி ஷலனி ரோஷனா பெர்னாண்டோ ஆகியோர் விசாரணைக் குழுவின் ஏனைய உறுப்பினர்களாவர்.