வெள்ளவத்தையில் வசிக்கும் ஒரு பெண்ணிடமிருந்து கோரிய கப்பதில் 700,000 ரூபாவை நேற்று செவ்வாய்கிழமை கொம்பனி வீதி பிரதேசத்தில் வசிக்கும் இருவர் பெற்றுக்கொள்ள வந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாக கொண்டு தற்போது இங்கிலாந்தில் வசித்து வரும் நபர் சமூக ஊடகங்கள் மூலம் கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு குறித்த 33 வயதான பெண்ணிடம் உறவினை பேணியுள்ளார்.
இந் நிலையில் குறித்த பெண்ணின் புகைப்படங்களை சமூக ஊடகங்களில் வெளியிடுவதாக அச்சுறுத்தியதோடு படங்களை வெளியிடுவதைத் தவிர்ப்பதற்காக 14 மில்லியன் ரூபா கப்பம் கோரியதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
ஆரம்ப கட்டணமாக குறித்த பெண் கொழும்பின் யூனியன் சாலையில் சந்தேக நபரால் அனுப்பப்பட்ட இருவரிடம் 700,000 ரூபா பணத்தை ஒப்படைக்க ஒப்புக்கொண்டார்.
இந் நிலையிலேயே குறித்த சந்தேக நபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் இன்று கோட்டை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுஉள்ளனர்.
அதே வேளை இங்கிலாந்தில் வசிக்கும் முக்கிய சந்தேக நபர் மீது விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.