இலங்கையில் உள்ள மருத்துவமனைகளில் நோயாளர் சிகிச்சைக்காக 140 க்கும் மேற்பட்ட அத்தியாவசிய மருந்து வகைகள் கையிருப்பில் இல்லை அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் சுகாதார அமைச்சின் கவனம் செலுத்தப்பட வேண்டுமென சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் வைத்தியர் சமில் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.
இந்த நிலைமையைக் கருத்தில் கொண்டு, தேசிய வைத்தியசாலை முதல் கிராமிய வைத்தியசாலைகள் வரையிலான முழு வைத்தியசாலையின் சுகாதார சேவைகளைப் பேணுவது பாரிய சவாலாக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, இந்திய கடன் உதவி முறையின் கீழ் இலங்கைக்கு கொண்டு வரப்படும் 80 வீதமான மருந்துகள் பதிவு செய்யப்படவில்லை. என சுகாதார வல்லுநர்கள் சங்கத்தின் தலைவர் ரவி குமுதேஸ் குறிப்பிட்டுள்ளார்