உலகக் கிண்ண ரி20 போட்டித் தொடரின் இன்றைய போட்டியில் இலங்கை மற்றும் அயர்லாந்து அணிகள் மோதுகின்றன.
நாணய சுழற்சியில் அயர்லாந்து அணி வெற்றிப் பெற்று முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.
அதனடிப்படையில் முதலில் களமிறங்கிய அயர்லாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்களை இழந்து 128 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.
பந்துவீச்சில் இலங்கை அணி சார்ப்பில் மஹீஷ் திக்ஷன மற்றும் வனிந்து ஹசரங்க ஆகியோர் தலா 2 விக்கெட்களை வீழ்த்தியிருந்தனர்.
அதனடிப்படையில் இலங்கை அணிக்கு 129 ஓட்டங்கள் வெற்றியிலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.