கடந்த மே மாதம் 9ஆம் திகதி “மைனா கோ கம” மற்றும் “கோட்டா கோ கம” என்பவற்றின் மீது தாக்குதல் நடத்தியமைதொடர்பான விசாரணைகளுக்காக முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ இன்று அழைக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
9ஆம் திகதி இடம்பெற்ற கலவரம் தொடர்பிலான விசாரணைகளை மனித உரிமைகள் ஆணைக்குழு முன்னெடுத்துள்ளது.
சம்பவம் தொடர்பில் இதுவரை பொலிஸ் அதிகாரிகள், சிறைச்சாலை திணைக்கள அதிகாரிகள் உள்ளிட்டவர்கள் வாக்குமூலங்களை அளிக்காமை காரணமாக, அவர்கள் இன்றைய தினம் விசாரணைகளுக்காக அழைக்கப்பட்டுள்ளனர்.
இறுதியாக மஹிந்த அழைக்கப்படுவார்!
இதன் காரணமாக மஹிந்த ராஜபக்ஸவின் விசாரணைகள் பிற்போடப்பட்டுள்ளதாகவும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
மேலும் சம்பவம் தொடர்பில் அனைத்து தரப்பினரினதும் வாக்குமூலங்கள் பெறப்பட்டதும் இறுதியில் மஹிந்த ராஜபக்ஸ உள்ளிட்ட அரசியல்வாதிகளை அழைக்க தீர்மானித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.