நுவரெலியா – மஸ்கெலியாவில் 100 அடி பள்ளத்தில், பாய்ந்து முச்சக்கர வண்டி ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த விபத்து சம்பவம் இன்றைய தினம் (09-08-2023) இடம்பெற்றுள்ளது.
குறித்த முச்சக்கர வண்டியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் பயணித்த நிலையில், அவர்கள் அனைவரும் காயங்களுக்கு உள்ளாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் நீர்கொழும்பில் வசிப்பவர்கள் எனவும், அவர்கள் இறுதி சடங்கிற்கு வந்திருந்ததாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.
இறுதிச் சடங்கிற்குச் சென்று திரும்பிய போது முச்சக்கரவண்டியின் சாரதியால் வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் இந்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்