இரு பாம்புகளில் ஆண் பாம்பு இறந்து விட்டது இதற்கு அருகில் பெண் பாம்பு ஒன்று இருந்து கவலைப்படும் வீடியோ இன்றும் வைரலாகி வருகின்றது.
சமூக வலைத்தளங்களில் பல பாம்பு வீடியோக்களை பார்த்திருப்போம். அவைற்றில் ஒவ்வொன்றும் வேறுபட்டவை. பொழுதை களிக்க மனிதன் தற்போது பயன்படுத்தும் ஒரு ஆயுதம் ஸ்மாட் போன்கள் தான்.
இதில் பல வகையான வீடியோக்களை பார்க்கும் போது நமக்குள்ளே பல எண்ணங்கள் தோன்றி அது வேறு வழிக்கு அழைத்து செல்லும். அப்படியான ஒரு வீடியோ தான் இன்று வைரலாகி வருகின்றது.
பண்ணை ஒன்றில் பாம்பு ஒன்று இறந்துள்ளது. இது ஜோடி பாம்புகளுள் ஒன்றாகும்.இறந்த பாம்பு உடலை ஒரு இடத்தில் எடுத்து போட்டதுடன், உயிரிருடன் இருந்த பெண் பாம்புக்கு தண்ணீர் கொடுத்தனர்.
இருப்பினும் அந்த பெண் பாம்பு ஆண் பாம்பின் உடலையே துடிதுடித்து பார்த்துக் கொண்டிருந்தது. எந்தவித அசைவும் இல்லாதபோதும், ஆண் பாம்பை விட்டு பெண் பாம்பு நகரவே இல்லை. சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக அந்த இடத்திலேயே பெண் பாம்பு இருந்தது.