இராணுவத்தினரால் தாக்கப்பட்ட ஊடகவியலாளரை முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கு சென்று சிவகுரு ஆதீன முதல்வர் வேலன் சுவாமிகள் நேரில் சந்தித்துள்ளார்.
முல்லைத்தீவு, முள்ளிவாய்க்கால் பகுதியில் தகவல் சேகரிப்பில் ஈடுபட்ட ஊடகவியலாளர் விஸ்வலிங்கம் விஸ்வச்சந்திரனை மீது இராணுவத்தினர் தாக்குதலை மேற்கொண்டு சித்திரவதை புரிந்த நிலையில் படுகாயமடைந்த நிலையில் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், தாக்கப்பட்ட ஊடகவியலாளரை இன்று முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கு சென்று வேலன் சுவாமிகள் சந்தித்துள்ளார்.
மேலும், இச் சம்பவத்தை கண்டித்து இன்று முல்லைத்தீவில் பாரிய ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.