போக்குவரத்துப் பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் இராணுவ கோப்ரல் தர அதிகாரி உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த சம்பவம் பண்டாரகம பகுதியில் இடம்றெ்றுள்ளது. போக்குவரத்து பொலிஸாரிடம் “நான் ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவில் கடமை புரிகிறேன் எனக்குச் சட்டங்கள் தெரியும்“ என அவர்களின் ஒருவர் பொலிஸாரிடம் கூறி கடமைக்கு இடையூறு விளைத்ததாக பண்டாரகம பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மேலும் சந்தேக நபர்களிடம் விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.