இரத்தினபுரி தும்பறை 82 ஆம் பிரிவில் உள்ள தோட்ட அதிகாரி மற்றும் காவலாளி ஆகியோர் இணைந்து தோட்ட தொழிலாளர்களை தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை தோற்றுவித்துள்ளது.
தனியார் தோட்ட முகாமையாளர்களால் தோட்டத்தொழிலாளர்கள் தாக்கப்படும் விடயமானது அண்மைக்காலமாக அதிகரித்துள்ளது.
இவ்வாறே இரத்தினபுரி தும்பறை தோட்டப்பகுதியிலும் அடாத்தாக தோட்ட தொழிலாளரரும் அவரது மனைவியும் தோட்ட முகாமையாளரால் தாக்கப்பட்டுள்ளார்.
இது குறித்து ஆராய்வதற்காக சென்ற நாடாளுமன்ற உறுப்பினர்களான மனோ கணேசன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் ஆகியோர் குறித்த பகுதிக்கு சென்றுள்ளனர்.
எனினும் தாக்குதல் தொடர்பில் முகாமையாளரிடம் பேச்சுவார்த்தைக்காக சென்றபோது அவர் அதனை பொருட்படுத்தாமல் இருந்தமையானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.