இரத்தினபுரியில் கிடைத்த மிகப் பெரிய நட்சத்திர நீல மாணிக்கற்கள் அடங்கிய தொகுப்பை கொள்வனவு செய்வதற்காக சீனாவில் இருந்து 500 மில்லியன் டொலர் பேரம் முன்வைக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் முகாமைத்துவம் மற்றும் மாணிக்கக்கல் சம்பந்தமான ராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தே தெரிவித்துள்ளார்.
இது 10 ஆயிரம் கோடி ரூபாய் அளவிலான பணம் எனவும் அவர் கூறியுள்ளார்.
மாணிக்கக்கல்லின் பெறுமதியை சரியாக மதிப்பிடாமல், அதன் பெறுமதியை உத்தியோகபூர்வமாக வெளியிட முடியாது என்ற போதிலும் இப்படியான விலைகள் முன்வைக்கப்படும் போது, அதன் பெறுமதி மிகவும் அதிகரிக்கும் எனவும் ரத்வத்தே குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும் முன் வைக்கப்படும் அதிகமான விலைக்கு இந்த மாணிக்கக்கல் விற்பனை செய்யப்படும் எனவும் ராஜாங்க அமைச்சர் கூறியுள்ளார்.
510 கிலோ கிராம் எடை கொண்ட இந்த மிகப் பெரிய நட்சத்திர நீல மாணிக்கற்கள் கொண்ட தொகுப்பில் அதிகளவிலான நட்சத்திர நீல மாணிக்ககற்கள் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.