இரண்டு அமைச்சுச் செயலாளர்கள் நியமனம் தொடர்பான இரண்டு அதிவிசேட வர்த்தமானிகள் ஜனாதிபதியின் செயலாளரால் வெளியிடப்பட்டுள்ளன.
இதன்படி, மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சின் செயலாளராக மாபா பத்திரனவும் சுகாதார அமைச்சின் செயலாளராக வைத்தியர் பாலித குணரத்ன மஹிபாலவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்த அதிவிசேட வர்த்தமானிகள் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவினால் வியாழக்கிழமை (23) வெளியிடப்பட்டன.
வர்த்தமானி அறிவித்தல்களின்படி, மாபா பத்திரன, நவம்பர் 21 முதல் டிசம்பர் 31 வரை ஒரு மாத காலத்திற்கு மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சின் செயலாளராக தனது புதிய பதவியில் பணியாற்றுவார் .
இதேவேளை, வைத்தியர் பாலித மஹிபால, நவம்பர் 20 ஆம் திகதி முதல் ஒரு வருட காலத்திற்கு சுகாதார அமைச்சின் செயலாளராக தனது புதிய பதவியில் இருப்பார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.