இலங்கையின் இரண்டாவது குரங்கம்மை நோய்த் தொற்றாளர் இனங்காணப்பட்டுள்ளார்.
சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.
துபாயில் இருந்து நாடு திரும்பிய இலங்கையர் ஒருவருக்கே இவ்வாறு குரங்ம்மை தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
அவர் சிகிச்சைக்காக அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த முதலாம் திகதி இலங்கையின் முதலாவது குரங்கம்மை தொற்றாளர் அடையாளம் காணப்பட்டிருந்தார்.
டுபாயில் இருந்து இலங்கை வந்த 20 வயதுடைய இளைஞன் ஒருவரே குரங்கம்மை தொற்றாளராக அடையாளம் காணப்பட்டிருந்தார்.