மேஷம்:
மேஷ ராசி காரர்களுக்கு இன்று சில சோதனைகள் வரக்கூடிய நாளாக இருக்கப் போகின்றது. இருப்பினும் எல்லா பிரச்சினைகளையும் உங்களுடைய புத்திசாலித்தனத்தால் சாதுரியமாக சமாளித்து விடுவீர்கள். இன்று வேகத்தைவிட விவேகம் தான் உங்களுக்கு அவசியம் தேவைப்படும். எல்லா விஷயத்திலும் பொறுமை காப்பது நல்லது.
ரிஷபம்:
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று சந்தோஷம் நிறைந்த நாளாக இருக்கப்போகின்றது. வீட்டில் உறவினர்களின் வருகை இருக்கும். பலமான சாப்பாடு கிடைக்கும். புதிய முயற்சிகள் வெற்றி தரும். வேலை செய்யும் இடத்தில் அடுத்த கட்டத்தை நோக்கி செல்வீர்கள். அதாவது சம்பள உயர்வு, பிரமோஷன் போன்ற பேச்சுவார்த்தைகள் நடப்பதற்கு வாய்ப்பு உள்ளது.
மிதுனம்:
மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த நாள் முன்னேற்றம் தரக்கூடிய நாளாக அமைய போகின்றது. மேலதிகாரிகளின் பாராட்டைப் பெற்று, வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கு என்று ஒரு அங்கீகாரத்தை பெற போகிறீர்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். ஆரோக்கியமான சாப்பாட்டை நேரா நேரத்திற்கு சாப்பிடுவது நன்மை தரும்.
கடகம்:
கடக ராசிக்காரர்கள் இன்றைய நாள் முழுவதும் நிதானத்தோடு செயல்பட வேண்டும். எந்த விஷயத்திலும் அவசரப்படக்கூடாது. முன்கோபம் இருக்கவே கூடாது. நீங்கள் நினைத்த காரியம் நடக்கவில்லை என்றாலும் அந்த இடத்தில் தான் முக்கியமாக பொறுமை காக்க வேண்டும். நீண்டநாள் கஷ்டங்கள் அனைத்தும் வீணாகி விடும் கொஞ்சம் அவசரபட்டால் கூட.
சிம்மம்:
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று முயற்சிகளில் சின்ன சின்ன தோல்விகள் ஏற்படும். தடைகள் ஏற்பட்டாலும் பரவாயில்லை. விடா முயற்சியை கைவிடாமல் பற்றிக் கொள்ளுங்கள். வெற்றி உங்கள் பக்கம். சொந்த தொழில் எதிர்பாராத சில திருப்பங்கள் ஏற்படும். கணவன் மனைவிக்கிடையே இருந்த சின்ன சின்ன பிரச்சனைகள் சரியாகும்.
கன்னி:
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சிறப்பான நாளாக அமைய போகின்றது. குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். வேலை செய்யும் இடத்தில் மட்டும் வேலைப்பளு அதிகமாக இருக்கும் காரணத்தினால் லேசாக மன அழுத்தம் ஏற்படும். வீட்டிற்கு வந்து குழந்தைகளுடன் நேரத்தை செலவழிக்கும் போது அந்தப் பிரச்சனையும் சரியாகிவிடும்.
துலாம்:
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று வெற்றி வாகை சூட கூடிய நாளாக இருக்கப்போகின்றது. நீண்ட நாட்களாக முயற்சி செய்து வந்த விஷயங்கள் அனைத்தும் இனி ஒவ்வொன்றாக படிப்படியாக உங்களுக்கு வெற்றியை கொடுக்கும். சந்தோஷத்தில் மனநிறைவாக இருப்பீர்கள். குலதெய்வத்திற்கு நன்றி சொல்லுங்கள்.
விருச்சிகம்:
விருச்சக ராசிகாரர்கள் இன்று நிதானத்தோடு செயல்பட்டால் பல காரியங்களில் வெற்றி அடையலாம். தேவையில்லாத விஷயத்துக்கு முன் கோபப்பட்டு அனாவசியமான வார்த்தைகளை கொட்டிவிட்டால் மீண்டும் வாழ்க்கையில் முன்னேற்றம் அடைய இன்னொரு வாய்ப்பு கிடைப்பது மிக மிக கஷ்டம்.
தனுசு:
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று சந்தோஷம் நிறைந்த நாளாக இருக்கப் போகின்றது. வீட்டில் இதனால் வரை இருந்து வந்த சின்ன சின்ன பிரச்சனைகள் கூட சரியாகிவிடும். நட்பு வட்டாரத்தின் மூலம் உதவிகள் கிடைக்கும். தந்தைவழி உறவுகளால் ஆதாயம் கிட்டும். பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் மட்டும் கொஞ்சம் உஷாராக இருப்பது நல்லது.
மகரம்:
மகர ராசிக்காரர்கள் தேவையற்ற விஷயங்களை மனதில் போட்டு குழப்பிக் கொள்ளாமல் இருக்க வேண்டும். நல்லதை மட்டுமே நினைத்தால் நல்லது மட்டுமே நடக்கும். எதிர்மறையான சிந்தனை உங்கள் வாழ்க்கையில் நிறைய பிரச்சினைகளை கொண்டு வர வாய்ப்புகள் உள்ளது. மனதை அமைதிப்படுத்த தினமும் காலையில் ஓம் நமசிவாய மந்திரத்தை சொல்லி தியானம் செய்யுங்கள்.
கும்பம்:
கும்ப ராசி காரர்களுக்கு இன்றைய நாள் கொஞ்சம் சுமாரான நாளாகத்தான் இருக்க போகின்றது. வேலை செய்யும் இடத்தில் பிரச்சனை வரும். நண்பர்களுக்கு இடையே மோதல்கள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. கொஞ்சம் உஷாராக நடந்து கொள்ளுங்கள். முன்கோபத்தை குறைத்துக் கொள்ளுங்கள். மனதிற்குள் ஸ்ரீராமஜெயம் சொல்லிக்கொண்டே இருங்கள்.
மீனம்:
மீன ராசிக்காரர்கள் இன்று உற்சாகத்துடன் செயல்பட போகிறீர்கள். நீண்ட நாட்களாக முடிக்காமல் வைத்திருந்த வேலை ஒன்றை இன்றைய நாள் முடிப்பதற்கு வாய்ப்புகள் தேடி வரும். வீட்டில் குழந்தையுடன் சந்தோஷமாக நேரத்தை கழிப்பீர்கள். அனாவசியமாக யாரிடமும் வாக்குக் கொடுத்து சிக்கிக்கொள்ள வேண்டாம். சொன்ன வாக்கை காப்பாற்றாமல் போனால் அது அவமானம் அல்லவா