மேஷம்:
மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் இனிய பலன்களைக் கொடுக்கக் கூடிய அற்புதமான நாளாக அமைகிறது. நீங்கள் உங்கள் மனதில் நினைத்த காரியம் ஒன்று நடக்கும். சுய தொழிலில் இருப்பவர்களுக்கு லாபம் பெருகும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு தகுந்த சன்மானம் கிடைக்கும். ஆரோக்கியம் மேம்படும். குலதெய்வ வழிபாடு மேற்கொள்வது நல்லது.
ரிஷபம்:
ரிஷப ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் சிறப்பான பலன்களைக் கொடுக்கக் இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் அப்போ நீங்கள் நினைத்ததை அடைய கூடிய வாய்ப்புகள் அமையும். உங்களைச் சுற்றி இருக்கும் பகைவர்களை எளிதாக கண்டுபிடித்து விடலாம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சாதிக்கக் கூடிய அமைப்பு உண்டு. விநாயகரை வழிபடுதல் வேண்டும்.
மிதுனம்:
மிதுன ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் இனிய நாளாக இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்கள் எதிர்பார்க்கும் அளவிற்கு வருமானம் கிடைக்கப் பெறுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சக பணியாளர்கள் ஆதரவு கிடைக்கும். புதிய நண்பர்களின் அறிமுகம் கிடைக்கப் பெறுவீர்கள். கணவன் மனைவிக்குள் இருக்கும் அன்பு மேலும் அதிகரிக்கும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
கடகம்:
கடக ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் அனுகூலமான பலன்கள் பெற இருக்கிறீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்கள் வெளியிட போக்குவரத்து தொடர்பான விஷயங்களில் கவனம் செலுத்துவது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேலதிகாரிகள் உடைய அனுகூலமான ஆதரவு கிடைக்கும். குடும்ப பிரச்சினைகள் தீர வாய்ப்புகள் உண்டு. சிவ வழிபாடு நல்லது.
சிம்மம்:
சிம்ம ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் நினைத்ததை சாதிக்க கூடிய வகையில் அமைப்பு இருப்பதால் மகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு நீங்கள் எதிர்பார்க்கும் அளவிற்கு லாபம் கிடைத்தாலும் வரவுக்கு மேல் செலவுகள் இருக்க வாய்ப்புகளுண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்கள் பொருளாதார ரீதியாக முன்னேற்றம் காண இருக்கிறீர்கள்.
கன்னி:
கன்னி ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் கடமையில் கூடுதல் அக்கறை தேவை. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு நீங்கள் நினைத்ததை நினைத்தபடி நடத்தை காட்டுவீர்கள். உங்களைச் சுற்றியிருக்கும் பகைவர்களை இனம் கண்டு கொள்வீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மறைமுக எதிரிகளின் தொல்லை நீங்கும். அம்பிகையை துதியுங்கள் நல்லது நடக்கும்.
துலாம்:
துலாம் ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதிர்பார்க்கும் அளவிற்கு நன்மைகள் நடைபெறவிருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு பங்குதாரர்கள் மூலம் நல்ல சிறப்புப் பலன்களை பெறலாம். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு கனவுகள் நனவுகளாக வாய்ப்புகள் உண்டு. ஆரோக்கிய ரீதியாக பாதிப்புகள் குறையும்.
விருச்சிகம்:
விருச்சிக ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் புதிய சொத்துக்கள் வாங்கும் முயற்சியில் அனுகூல பலன் தர இருக்கிறீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு சுற்றியிருக்கும் போட்டியாளர்களை சமாளிக்கும் தைரியம் பிறக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர் பார்க்கும் இடத்தில் இருந்து பணம் வரவு சிறப்பாக அமைய இருக்கிறது. ஆரோக்கியம் மேம்படும்.
தனுசு:
தனுசு ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நிதானத்துடன் இருக்க வேண்டிய நாளாக அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் ஈடுபட்டு உள்ள உங்களுக்கு அதிக பொறுமை தேவைப்படும் நாளாக இருக்கிறது. தேவையற்ற வார்த்தைகளை விடும் முன் கவனம் செலுத்துவது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் நினைத்தது நடக்கும். ஆரோக்கிய ரீதியான முன்னேற்றம் சிறப்பாக இருக்கும்.
மகரம்:
மகர ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் நினைப்பது ஒன்று நடப்பது ஒன்றாக அமையும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு உங்களுக்கு போட்டியாக இருந்தவர்கள் தானாகவே விலகி செல்வார். கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் நீங்கி அதிகரிக்கும். பூர்வீக சொத்துக்கள் அனுகூல பலன் தரும்.
கும்பம்:
கும்ப ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதிர்பார்க்கும் அளவிற்கு பலன்கள் கிடைப்பதில் இடையூறுகள் ஏற்படும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு பயணங்களின் போது கவனம் தேவை. வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படும் என்பதால் கூடுமானவரை ஆடம்பரத்தை தவிர்ப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு இட மாற்றம் குறித்த அதிர்ஷ்டம் உண்டு.
மீனம்:
மீன ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் குடும்பத்தில் அமைதி நிலவும் சகோதர சகோதரிகளுக்கு இடையே ஒற்றுமை குறைவதற்கான வாய்ப்புகள் உண்டு எனவே கவனம் தேவை. கணவன் மனைவி பிரச்சனைகள் தீர்வுக்கு வரும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு லாபம் பெருகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் உடைய கனவுகள் நிறைவேறும். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது.