மேஷம்:
மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் சாதகம் மற்றும் அமைப்பு என்பதால் வெளியிடங்களில் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. குடும்பத்தில் அமைதி நிலவ கருத்து மோதல்கள் வேண்டாம். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு சுபகாரிய தடைகள் அகலும். சுய தொழிலில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு வருமானம் சீராக இருக்கும். பண விஷயத்தில் எச்சரிக்கை தேவை.
ரிஷபம்:
ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் சுபிட்சம் தரும் அமைப்பாக இருக்கிறது. குடும்பத்தில் சுபகாரிய பேச்சு வார்த்தைகள் நடக்கும். கணவன் மனைவி இடையே இருக்கும் மனப்போர் நீங்கும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு வாகன ரீதியான வீண் விரயங்கள் ஏற்படலாம் பராமரிப்பு தேவை. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பார்த்த சலுகைகள் கிடைப்பதில் காலதாமதம் ஏற்படலாம்.
மிதுனம்:
மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் புது உற்சாகத்துடன் காணப்படுவீர்கள். ஏற்றம் தரக்கூடிய அமைப்பு என்பதால் சுய தொழிலில் உள்ளவர்களுக்கு லாபகரமானதாக இருக்கப் போகிறது. வெளியூரில் இருந்து சுப செய்திகள் கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு கொடுத்த வேலைகளை சரியாக செய்து முடிப்பதில் இடையூறுகள் ஏற்படலாம். ஆரோக்கியத்தை கவனியுங்கள்.
கடகம்:
கடகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் தொட்டதெல்லாம் வெற்றியாக கூடிய இனிய நாளாக இருக்கிறது. கணவன் மனைவிக்கு இடையே நடக்கும் பிரச்சனைகளை பற்றி விவாதிப்பது நல்லது. முக்கிய முடிவுகள் எடுப்பதற்கு சாதகமான அமைப்பு என்பதால் சுய தொழிலில் உள்ளவர்களுக்கு அனுகூலமான பலன்கள் கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் சக போட்டியாளர்களை சமாளிக்க திணறுவீர்கள்.
சிம்மம்:
சிம்மத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் முன்கோபத்தை தவிர்ப்பது நல்லது. தேவையற்ற வார்த்தைகளை பிரயோகிப்பதால் தேவையற்ற இழப்புகளை சம்பாதிக்க கூடும். கணவன் மனைவி ஒற்றுமையில் விரிசல் விழ வாய்ப்புகள் உண்டு. சுய தொழிலில் உள்ளவர்களுக்கு எதிர்பாராத ஜாக்பாட் அடிக்க போகிறது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு எதிர்மறையான சிந்தனைகள் ஏற்படும் என்பதால் தியானம் மேற்கொள்வது நல்லது.
கன்னி:
கன்னியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய கடமையில் கூடுதல் அக்கறையுடன் இருப்பது நல்லது. குடும்ப பொறுப்புகள் எதையும் தட்டி கழிக்க வேண்டாம். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கக்கூடிய இனிய நாளாக இருக்கிறது. உத்தியோகஸ்தர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு தேவை என்பதால் பொறுமையுடன் இருப்பது நல்லது. ஆரோக்கியம் மேம்படும்.
துலாம்:
துலாத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் சோர்வுடன் காணப்படுவீர்கள். குடும்ப பொறுப்புகள் கூடும். உடல் ரீதியான பாதிப்புகளை சமாளிக்க உணவு கட்டுப்பாடு மேற்கொள்வது நல்லது. சுய தொழிலில் உள்ளவர்களுக்கு அமைதியான சூழ்நிலை நிலவும். கணவன் மனைவி இடையே அன்னோன்யம் கூடும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு ஓய்வு தேவை.
விருச்சிகம்:
விருச்சிகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் எதிர்பார்த்த விஷயங்கள் ஏமாற்றம் அடைய வாய்ப்புகள் உண்டு. சுப காரிய விஷயங்களை தள்ளிப் போடுவது உத்தமம். கணவன் மனைவி உடைய வீண் சந்தேகம் தவிர்க்க வேண்டும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு கஷ்டமான வேலையையும் சுலபமாக முடிக்க கூடிய வாய்ப்புகள் உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு கவன சிதறல் ஏற்படலாம் என்பதால் கூடுதல் விழிப்புணர்வுடன் செயலாற்றுவது நல்லது.
தனுசு:
தனுசில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் எடுக்கக்கூடிய முடிவுகளுக்கு பல விமர்சனங்களை சந்திக்க வேண்டி இருக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு புதிய நட்பு மலரும். கணவன் மனைவி உறவுக்கு இடையே புரிதலை ஏற்படுத்திக் கொள்வது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு வாடிக்கையாளர்களை கவரும் எண்ணம் மேலோங்கி காணப்படும். உங்கள் திறமையை மெருகேற்றிக் கொள்ள முயற்சி செய்யுங்கள்.
மகரம்:
மகரத்தில் பிறந்தவர்களுக்கு இன்று நாள் நீங்கள் உங்கள் தகுதிக்கு மீறிய சில விஷயங்களை செய்ய முனைவீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு வருமான ரீதியான முன்னேற்றம் சிறப்பாக இருக்கும் என்பதால் வீட்டு தேவைகளை எளிதாக பூர்த்தி செய்வீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உடல் ரீதியான பாதிப்புகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு எனவே முன்னெச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.
கும்பம்:
கும்பத்தில் பிறந்தவர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் எடுக்கக்கூடிய முக்கிய முடிவுகள் உங்களுக்கு சாதகமாக இருக்கும். புதிய சொத்துக்கள் வாங்கும் முயற்சியில் கவனம் தேவை. பெரியோர்களின் ஆசிர்வாதம் பெறுவது நல்லது. சுயதொழிலில் உள்ளவர்களுக்கு திடீர் திருப்பங்கள் ஏற்படும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு திறமைக்கு உரிய அங்கீகாரம் கிடைப்பதில் சிக்கல் நீடிக்கும்.
மீனம்:
மீனத்தில் பிறந்தவர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் நினைத்தது நடக்கும் இனிய நாளாக இருக்கிறது. நீண்ட நாட்களாக இழுபறியிலிருந்த வேலை முடியும். மனதிற்கு பிடித்தவர்கள் மூலம் அனுகூலமான செய்திகளை கேட்கலாம். கணவன் மனைவி உறவுக்கு இடையே நெருக்கம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு புதிய விஷயங்கள் புதிய பாதையை அமைக்கும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு வருமானம் உயரும்.