மேஷம்:
மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் இனிய நாளாக அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு நீங்கள் செய்யக்கூடிய சில புதிய விஷயங்கள் அற்புதமான பலன் அளிக்கக்கூடிய வகையில் அமைப்பு உள்ளது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலையில் கூடுதல் கவனம் தேவை. கணவன் மனைவி அன்பு அதிகரிக்கும் வாய்ப்புகள் உண்டு.
ரிஷபம்:
ரிஷப ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நல்ல நாளாக அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு நீண்ட நாள் கனவுகள் நிறைவேறும். உத்யோகத்தில் இருப்பவர்கள் உடைய எண்ணங்கள் ஈடேற கூடுமானவரை பொறுமை காப்பது நல்லது. கணவன் மனைவிக்கு இடையே நடக்கும் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. எதிர்பாராத திடீர் அதிர்ஷ்டம் வருவதற்கான வாய்ப்புகள் உண்டு.
மிதுனம்:
மிதுன ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதிலும் ஜெயம் உண்டாகும் அற்புத நாளாக அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு நீங்கள் நினைத்ததை அடைய கூடிய வகையில் அமைப்பு உள்ளது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் உடைய நீண்ட நாள் பிரச்சனைகள் தீர்வுக்கு வரும் யோகமுண்டு. கணவன் மனைவிக்கு இடையே நடக்கும் பிரச்சனைகள் படிப்படியாக குறையும். ஆரோக்கியம் சீராகும்.
கடகம்:
கடக ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்கள் உழைப்பிற்கு உரிய பலன்களை பெற இருக்கிறீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்கள் அனுகூலமான பலன்களை பெற கூடுமானவரை விட்டு கொடுத்து செல்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நீண்டகாலம் இழுபறியில் இருந்துவந்த செயல்களை முடிக்கக்கூடிய சந்தர்ப்பங்கள் அமையும். புதிதாக வாங்கக்கூடிய பொருட்களில் கவனம் தேவை. ஆரோக்கியம் மேம்பட்டு வரும்.
சிம்மம்:
சிம்ம ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் எதிர்பார்ப்பதை விட வேறு ஒன்று நடக்க வாய்ப்புகள் உண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு பழைய பாக்கிகள் வசூலாகும். பொருளாதார ரீதியான ஏற்றம் சிறப்புற அமைய இருப்பதால் வீட்டுத் தேவைகளைப் பூர்த்தி செய்து விடுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். தொழில் நுணுக்கங்களை கற்றுக் கொள்ளும் யோகம் உண்டு. ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துங்கள்.
கன்னி:
கன்னி ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் நினைத்த ஒரு விஷயத்திற்கு தடைகள் வர வாய்ப்புகள் உண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்கள் தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்த்து வேலையில் கவனம் செலுத்துவது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் புதிய முயற்சிகளில் மேலதிகாரிகளின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். உங்கள் திறமையை மற்றவர்களுக்கு புரிய வைக்கும் வாய்ப்புகள் அமையும். ஆரோக்கியம் மேம்படும்.
துலாம்:
துலாம் ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் கடமை கண்ணியம் கட்டுப்பாடு என்று இருப்பது நல்லது தொழில் மற்றும் உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பாராத நன்மைகள் எல்லாம் நடைபெற இருக்கிறது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சக பணியாளர்களின் ஆதரவு கிடைக்கும். உங்கள் மீது சுமத்தப்பட்ட வீண் பழி மழையும் வாய்ப்புகள் உண்டு. குடும்பத்தில் இருந்து வந்த குழப்பங்கள் தீர்ந்து ஒற்றுமை பலப்படும். ஆரோக்கியம் சீராகும்.
விருச்சிகம்:
விருச்சிக ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் இனிய நாளாக அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்க்கும் அளவுக்கு லாபம் உண்டு. தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பது மூலம் நிம்மதி பெறலாம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அமாவாசை அலைச்சல் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. கணவன் மனைவிக்கு இடையில் நடக்கும் பிரச்சனைகளை கூடுமானவரை உங்களுக்குள்ளேயே பேசி தீர்த்துக்கொள்வது நல்லது. ஆரோக்கியம் படிப்படியாக சீராகும்.
தனுசு:
தனுசு ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் நினைத்ததை அடைய கூடிய வாய்ப்புகள் உண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு பங்குதாரர்கள் மூலம் அனுகூலமான பலன்கள் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு கிடைப்பதில் இடையூறுகள் ஏற்படலாம். கணவன் மனைவிக்கு இடையே நடந்து வரும் பிரச்சனைகள் தீரும். ஆரோக்கியம் மேம்படும்.
மகரம்:
மகர ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் எதிர்பார்ப்பதை விட நல்ல நாளாக அமைய இருக்கிறது. நீங்கள் நீண்ட நாள் எதிர்பார்த்து காத்திருந்த ஒரு சுப செய்திகள் உங்களுக்கு கிடைக்கப் பெற இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு பன்மடங்கு லாபம் பெருகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் தங்களுடைய பணிகளில் கூடுதல் கவனத்துடன் இருப்பது நல்லது. வெளியிட போக்குவரத்து தொடர்பான விஷயங்களில் சற்று கவனத்துடன் இருப்பது நல்லது. ஆரோக்கியம் பலம் பெறும்.
கும்பம்:
கும்ப ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் குடும்பத்தில் இருக்கும் குழப்பங்கள் தீரும் அற்புத நாளாக அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்கள் அதிக தொகையை ஈடுபடுத்தும் பொழுது சற்று கவனத்துடன் இருப்பது நல்லது. கணவன் மனைவிக்கு இடையே இருந்து வந்த கவலைகள் நீங்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் உடைய புதிய முயற்சிகளுக்கு நண்பர்களுடைய ஆதரவு கிடைக்கும். ஆரோக்கிய ரீதியாக சிறுசிறு பாதிப்புகள் தோன்றி மறையும்.
மீனம்:
மீன ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் குடும்பத்தில் புதிய நபர்களின் வருகை உற்சாகத்தை ஏற்படுத்தும் வகையில் அமைய இருக்கிறது. வெள்ளி மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு அனுகூலமான பலன் உண்டாகும் கூடுமானவரை அமைதி காப்பது நல்லது. தேவையற்ற சண்டை சச்சரவுகளில் ஈடுபடுவதை தவிர்க்கவும். உத்தியோகத்தில் உங்களை சுற்றி இருக்கும் பணியாளர்களை எதிர்க்கும் தைரியம் பிறக்கும். சாதித்து காட்ட வேண்டிய உதவிகள் அதிகரிக்கும்.