மேஷம்:
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிர்பார்க்கும் நல்ல விஷயங்கள் எல்லாம் நடைபெற இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு அமோகமான லாபம் பெருகும். கணவன் மனைவிக்கு இடையே இருக்கும் சண்டை சச்சரவுகள் எல்லாம் நீங்கும். குடும்பத்துடன் செலவிடக் கூடிய நாளாக அமைய இருக்கிறது. உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு அதிர்ஷ்டம் உண்டாகும். ஆரோக்யம் சீராக இருக்கும்.
ரிஷபம்:
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் இறை வழிபாடுகளில் அதிக ஆர்வம் ஏற்படக் கூடிய அற்புதமான நாளாக இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்கள் உங்களுடைய இரக்க சுபாவத்தால் பல நன்மைகளைப் பெறுவீர்கள். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு நீண்ட நாளாக கிடைக்க வேண்டிய விஷயம் ஒன்று கிடைக்க இருக்கிறது. குடும்பத்தில் அமைதி நிலவும். ஆரோக்கிய ரீதியாக பாதிப்புகள் குறையும்.
மிதுனம்:
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீண்ட நாள் நடக்க வேண்டுமென்று இருந்த காரியம் ஒன்று நடக்கும். கணவன் மனைவிக்கு இடையே இருக்கும் கருத்து வேறுபாடுகள் நீங்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு அதிர்ஷ்டம் பெருகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு போட்டியாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். குடும்பத்தில் பொறுப்பு சுமை அதிகரிக்கும் என்பதால் மனதில் தொய்வு ஏற்பட வாய்ப்புகள் உண்டு. விக்னேஸ்வரரை வழிபடுங்கள்
கடகம்:
கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் கடமை தவறாமல் நடந்து கொள்வீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்ப்பதை விட சிறப்பான பலன்கள் அமையப் பெறுகின்றன. உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு நீண்ட நாள் கனவுகள் நடக்கும். ஆரோக்கிய ரீதியான முன்னேற்றம் சிறப்பாக இருக்கும். கணவன் மனைவிக்கு இடையே இருக்கும் நெருக்கம் அதிகரிக்கும். பிள்ளைகள் வழியில் சுபச் செய்திகள் கிடைக்கப் பெறும். விக்னங்களை தீர்க்கும் விநாயகரை வழிபடுங்கள்.
சிம்மம்:
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் நினைத்ததை நினைத்தபடியே நடக்கும் அற்புதம் உண்டாக இருக்கிறது. தொழில் மற்றும் வியாபார ரீதியான வர்த்தகம் சிறப்பாக இருக்கும். பழைய எதிரிகள் தொல்லை தீரும். உத்தியோகத்திலிருப்பவர்கள் தங்கள் திறமைக்கு உரிய பலன்களை பெறுவீர்கள். எதிர்பார்க்கும் சலுகைகளும் கிடைக்கும். கணவன் மனைவிக்கு இடையே வாக்குவாதங்களை தவிர்ப்பது உத்தமம். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பது உத்தமம்.
கன்னி:
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் கடமை தொய்வு ஏற்பட வாய்ப்புகள் உண்டு. இறைவன் மீது பாரத்தைப் போட்டு நடப்பது நடக்கட்டும் என்று இருந்தால் நன்மைகள் உண்டாகும். கணவன் மனைவிக்கு இடையே இருக்கும் பரஸ்பர ஒற்றுமை அதிகரிக்க வாய்ப்புகள் உண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்கள் எந்த ஒரு முடிவையும் ஒருமுறைக்கு இரண்டு முறை சிந்தித்து விட்டு பின்னர் முடிவு எடுப்பது நல்லது. தடைப்பட்ட சுப காரிய முயற்சிகளில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு வெற்றி நிச்சயம் உண்டாகும்.
துலாம்:
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உற்சாகம் தரும் இனிய நாளாக அமைய இருக்கிறது. உடலில் இருக்கும் சோர்வு நீங்கி புத்துணர்வு ஏற்படும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்க்கும் சலுகைகளும், வருமான உயர்வும் உண்டாகும். உத்யோகத்தில் இருப்பவர்கள் தங்கள் குடும்பத்துடன் செலவிடக் கூடிய நல்ல நாளாக அமைய இருக்கிறது. சக போட்டியாளர்களுடன் இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். ஆரோக்கியத்தை கவனியுங்கள்.
விருச்சிகம்:
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுடைய கனிவான பேச்சாற்றல் மற்றவர்களை எளிதாக கவரும்படி அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு வாடிக்கையாளர்களின் நன்மதிப்பைப் பெற வாய்ப்புகள் உண்டாகும். சமூகத்தின் மீதான அக்கறை அதிகமாக உயரும். கணவன் மனைவிக்கு இடையே இருக்கும் கருத்து வேறுபாடுகள் நீங்கும். இருவருக்கும் பரஸ்பர ஒற்றுமை மேலோங்கி காணப்படும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள்.
தனுசு:
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதையும் எடுத்தோம் கவிழ்த்தோம் என்று செய்வதை தவிர்த்து சிந்தித்து செயல்படுவது உத்தமம். தடைப்பட்டுக் கொண்டிருந்த முக்கிய காரியங்கள் எல்லாம் வெற்றி காணும் யோகம் உண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு நன்மைகள் நடக்கும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு மேல் அதிகாரிகளுடன் பரஸ்பர ஒற்றுமை ஏற்படும். புதிய விஷயங்களை கற்றுக் கொள்வதற்கான ஆர்வம் அதிகரித்து காணப்படும். இறை வழிபாடுகளில் கவனம் செலுத்துங்கள் நிம்மதி பிறக்கும்.
மகரம்:
மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் தொட்டதெல்லாம் துலங்கக் கூடிய அற்புதமான நாளாக அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருந்து வந்த மந்தநிலை மாறும். கணவன் மனைவிக்கு இடையே இருக்கும் பிரச்சனைகள் தீர்ந்து அன்பு அதிகரித்து காணப்படும். குடும்பத்துடன் செலவிடக் கூடிய இனிய நாளாக அமைய இருக்கிறது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணிச்சுமை குறையும். ஆரோக்கியத்தில் படிப்படியான முன்னேற்றம் இருக்கும்.
கும்பம்:
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் குடும்பத்தில் அமைதி நிலவும். தொழில் மற்றும் வியாபாரத்தில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு எதிர்பார்ப்பதை விட அதிக லாபம் கிடைக்கும். பகை மறந்து மீண்டும் ஒன்றிணைய சிலருடன் வாய்ப்புகள் அமையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மன அமைதி இருக்கும். கணவன் மனைவிக்கு இடையே இருக்கும் சிறு சிறு பிரச்சனைகளை பேசி தீர்த்துக் கொள்வீர்கள். ஆரோக்கிய ரீதியான முன்னேற்றம் சிறப்பாக இருக்கும்.
மீனம்:
மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் நினைத்ததை நினைத்தபடியே நடக்கும். குடும்பத்தில் உறவினர்களின் வருகை மனதிற்கு உற்சாகம் தரும் வகையில் அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் நீங்கள் எதிர்பார்க்கும் வருமானம் கிடைக்கப் பெறும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் நீங்கள் நினைத்ததை சாதித்துக் காட்டுவீர்கள். கணவன் மனைவிக்கு இடையே அன்யோன்யம் அதிகரித்து காணப்படும். வெளியிட பயணங்களின் பொழுது கவனத்துடன் இருப்பது நல்லது. ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.