மேஷம்:
மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் இனிய நாளாக அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் புதிய மாற்றங்கள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு. உத்தியோகஸ்தர்களுக்கு வருமான உயர்வு உண்டாகும். குடும்பத்தில் வீண் பழிகள் ஏற்பட வாய்ப்புகள் இருப்பதால் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். ஆரோக்கியம் மேம்படும்.
ரிஷபம்:
ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் எடுக்கக்கூடிய முடிவுகளுக்கு உங்களுடைய நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு பணப்புழக்கம் இருக்கும். கொடுக்கல் வாங்கல் தொடர்பான பிரச்சினைகளை கவனிப்பது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு வேலைப்பளு அதிகரிக்கும்.
மிதுனம்:
மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் உங்களுடைய சுய அறிவை மேலும் வளர்த்துக் கொள்ள முயற்சி செய்வீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு பல தடைகளை தாண்டிய வெற்றி கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் தேவையற்ற இடங்களில் கருத்து மோதல்களை தவிர்ப்பது நல்லது. ஆரோக்கியம் சீராகும்.
கடகம்:
கடகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் எதிர்பார்த்த இடங்களிலிருந்து பண வரவைப் பெறுவீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு தெய்வீக ஈடுபாடு அதிகரிக்கும். கணவன் மனைவிக்குள் நெருக்கம் குறையும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு தேவையற்ற விமர்சனங்களுக்கு ஆளாக நேரிடும் என்பதால் எச்சரிக்கை தேவை.
சிம்மம்:
சிம்மத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய புதிய முயற்சிகளுக்கு நல்ல வரவேற்பு இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்கள் பேசும் பொழுது கவனம் தேவை. நீங்கள் ஒன்று பேச அது தவறாக புரிந்து கொள்ள நேரலாம். உத்யோகத்தில் உள்ளவர்களுக்கு தேவையற்ற அலைச்சல் ஏற்படும். பொருளாதார ரீதியான முன்னேற்றம் சிறப்பாக இருக்கும்.
கன்னி:
கன்னியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுக்கு வீண் அலைச்சல் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு தேவையற்ற குழப்பங்கள் தவிர்ப்பது நல்லது. முக்கிய முடிவுகளை எடுப்பதில் கவனம் செலுத்துங்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பார்த்த வாய்ப்புகள் கிடைக்கும். பிள்ளைகளின் எதிர்காலம் பற்றிய திட்டமிடல் மேலோங்கி காணப்படும்.
துலாம்:
துலாத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய சாமர்த்தியம் மற்றவர்களுக்கு வியப்பை ஏற்படுத்தும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு பெற்றோர்களுடைய ஒத்துழைப்பு கிடைப்பதில் இடையூறுகள் ஏற்படலாம். உத்தியோகத்தில் உள்ளவர்கள் முக்கிய முடிவுகளை எடுக்கும் முன் கலந்து ஆலோசிப்பது நல்லது. ஆரோக்கியம் மேம்படும்.
விருச்சிகம்:
விருச்சிகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய அணுகுமுறை மற்றவர்களுக்கு மதிப்பை உண்டாக்கிக் கொடுக்கும். சமூகத்தின் மீதான பார்வை மாறும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு கடமை உணர்வு அதிகரித்து காணப்படும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
தனுசு:
தனுசில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கும். கணவன் மனைவிக்கு இடையே பேச்சு வாழ்க்கையில் இனிமை தேவை. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு இன்றைய நாள் புத்துணர்ச்சியுடன் காணப்படும். உத்யோகத்தில் உள்ளவர்களுக்கு உழைப்பிற்கு ஏற்ற ஊதியம் கிடைக்கும். பங்குதாரர்களுடன் இருந்து வந்த பிரச்சினைகள் மாறும்.
மகரம்:
மகரத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் குடும்பத்தில் குதூகலம் காணப்படும். உற்றார் உறவினர்களின் ஆதரவு கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு தேவையற்ற இழப்புகள் ஏற்படும் என்பதால் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. கணவன் மனைவி இடையே பேச்சில் இனிமை தேவை. உத்தியோகஸ்தர்களுக்கு பதவி உயர்வு உண்டாவதில் சாதக பலன் உண்டு.
கும்பம்:
கும்பத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய அனுபவ அறிவை வைத்து முன்னேற கூடிய நாளாக இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு புதிய தன்னம்பிக்கை துளிர்விடும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு வாகன ரீதியான வீண் விரயங்கள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு. ஆரோக்கியம் படிப்படியாக சீராகி வரும்.
மீனம்:
மீனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய கனிவான பேச்சால் மற்றவர்களை எளிதாக வேலை வாங்குவது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு விருத்தி உண்டாக வாய்ப்புகள் உண்டு. கணவன் மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு புதுமையை உண்டாக்கக் கூடிய அற்புதமான வாய்ப்புகள் கிடைக்கும்