மேஷம்:
மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் ஆனந்தமான நல்ல நாளாக இருக்கப் போகிறது. குடும்பத்தில் உணவு விஷயத்தில் அக்கறை கொள்ளுங்கள். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு நண்பர்களின் உதவிகள் கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு வேலையை திட்டமிட்டு கடைசி நேர பரபரப்பை குறைக்கும்.
ரிஷபம்:
ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உறுதியான நம்பிக்கை உடைய நல்ல நாளாக இருக்கப் போகிறது. குடும்பத்தில் மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடக்கும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு வரவு செலவு கணக்குகளில் குழப்பம் வரலாம். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு புத்துணர்ச்சி கிடைக்க தேவையற்ற சிந்தனைகளை தவிர்க்கவும்.
மிதுனம்:
மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் புதிய முயற்சிகள் உங்களை உற்சாகப்படுத்தக்கூடிய அமைப்பாக இருக்கிறது. குடும்பத்தில் விசேஷ பேச்சு வார்த்தைகள் நடக்கும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு உடன்பிறப்புகளால் பணம் சார்ந்த பிரச்சினைகள் வரலாம். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு சோதனைகள் வரும்.
கடகம்:
கடகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எவ்வளவு சோதனைகள் வந்தாலும் மனம் தவறாமல் துணிச்சலுடன் செயல்படுவீர்கள். குடும்பத்தில் உள்ளவர்களுடன் அனுசரணையாக இருப்பது நல்லது. சுய தொழிலில் உள்ளவர்களுக்கு பேச்சில் இனிமை தேவை. உத்தியோகத்தில் உள்ளவர்கள் மற்றவர்களுக்கு உதவக்கூடிய நிலை வரக்கூடும்.
சிம்மம்:
சிம்மத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் தடைகளை தாண்டிய வெற்றி அடையக்கூடிய நல்ல அமைப்பாக இருக்கிறது. முடியாது என்று நினைத்த ஒரு காரியம் முடியும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு நல்லிணக்கம் தேவை. உத்தியோகத்தில் உள்ளவர்கள் அதிக அளவு பணத்தை செலவிடாதீர்கள். ஆரோக்கியம் சீராகும்.
கன்னி:
கன்னியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய குணாதிசயங்களை மாற்றிக் கொள்ள முயற்சி செய்யக் கூடிய நல்ல அமைப்பாக இருக்கிறது. கெட்ட விஷயங்களில் இருந்து மீண்டு வர நினைப்பீர்கள். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு வேலை தொடர்பாக அலைச்சல் ஏற்படும். உத்யோகஸ்தர்களுக்கு நிதானம் தேவை.
துலாம்:
துலாத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய முடிவுகளில் ஒரு முறைக்கு பலமுறை சிந்திப்பது நல்லது. எடுத்தோம் கவிழ்த்தோம் என்று அவசரப்படாதீர்கள். ஆபத்து உங்களுக்கு தான். குடும்பத்தில் அமைதி நிலவும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு புதிய சிந்தனைகள் தோன்றி மறையும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு சிலருடன் கருத்து மோதல் ஏற்படும்.
விருச்சிகம்:
விருச்சிகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதையும் போராடித்தான் பெற வேண்டி இருக்கும். கணவன் மனைவிக்கு இடையே இருக்கும் பிரச்சனையை பேசி பெரிதாக்காதீர்கள். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு இனிமையான தகவல்கள் கிடைக்கக்கூடும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு ரிலாக்சேஷன் கிடைக்கும்.
தனுசு:
தனுசில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் மற்றவர்களுடைய வேலையை கூட நீங்களே செய்யக்கூடிய அமைப்பாக இருக்கிறது. உடல் சோர்வு ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு. சுய தொழிலில் உள்ளவர்களுக்கு வரவிருக்கும் பணம் காலதாமதம் ஆகலாம். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பாராத வகையில் ஆதாயம் காணக்கூடிய யோகம் உண்டு.
மகரம்:
மகரத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் செய்யும் செயலில் நேர்த்தியாக இருப்பீர்கள். எதிலும் ஆர்வத்துடன் ஈடுபடக்கூடிய அமைப்பாக இருக்கிறது. சுய தொழிலில் உள்ளவர்கள் நெகட்டிவ் விமர்சனங்களை கண்டு கொள்ள வேண்டாம். குடும்பத்தில் ஒற்றுமை இருக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு விலைமதிப்பற்ற நேரம் வீணாகும்.
கும்பம்:
கும்பத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் டென்ஷன் நிறைந்த நாளாக இருக்கப் போகிறது. முடிந்தால் தியானம் மேற்கொள்வது நல்லது. குடும்பத்தில் தாய் வழி உறவினர்கள் மூலம் ஆதாயம் காணக்கூடிய வாய்ப்பு உண்டு. சுய தொழிலில் உள்ளவர்களுக்கு நிதி சார்ந்த பிரச்சினைகள் மேலோங்கி காணப்படும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு சுபச்செய்தி கிடைக்கும்.
மீனம்:
மீனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் சாதகமற்ற அமைப்பு என்பதால் எதிலும் அவசரப்பட்டு முடிவு எடுக்க வேண்டாம். கணவன் மனைவி இடையே விட்டுக் கொடுத்த செல்லுங்கள். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு கொடுக்கல் வாங்கல் பிரச்சனைகள் வரக்கூடும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு புதிய அனுபவங்கள் கிடைக்கும்.