மேஷம்:
மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் அனுகூலமான நல்ல பலன்கள் கிடைக்கும். நீங்கள் நினைத்ததை அடையும் வாய்ப்புகளை பெற போகிறீர்கள். கணவன் மனைவி இடையே இருக்கும் கருத்து ஒற்றுமையை இப்படியே தக்க வைத்துக் கொள்வது நல்லது. சுய தொழிலில் ஏற்றம் காணக்கூடிய அமைப்பாக இருக்கிறது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு சுமூகமான சூழ்நிலை காணப்படும்.
ரிஷபம்:
ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் குடும்பத்தில் அமைதி நிலவும். சுய தொழிலில் நீங்கள் எடுக்கும் புதிய முயற்சிகள் அனுகூலம் தரும் அமைப்பாக இருக்கிறது. திடீர் வரவு ஒன்று மகிழ்ச்சியை ஏற்படுத்தும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு போட்டிகள் அதிகரிக்கும் என்பதால் கூடுதல் பொறுப்பு தேவை. அலட்சியம் பல சமயங்களில் உங்களுக்கு பிரச்சனைகளை ஏற்படுத்தும் என்பதால் கவனமுடன் இருப்பது நல்லது.
மிதுனம்:
மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் செய்யக்கூடிய விஷயங்களில் முன்னெச்சரிக்கை தேவை. குடும்பத்தில் மூன்றாம் மனிதர்களின் தலையீடு இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள். சுப காரிய தடைகள் விலகும். மனதிற்கு பிடித்தவர்கள் மூலம் நல்ல செய்திகளை பெறுவீர்கள். சுய தொழிலில் லாபம் பெருகும். உத்தியோகஸ்தர்களுக்கு வருமானம் உயரும் வாய்ப்பு உண்டு.
கடகம்:
கடகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் ஏற்றம் தரக்கூடிய அமைப்பு என்பதால் புதிய வேகத்துடன் செயல்படுவது நல்லது. குடும்பத்தில் இருந்து வந்த குழப்பங்கள் தீரும். உங்களை சுற்றி இருப்பவர்களை இனம் கண்டு கொள்வீர்கள். சுய தொழிலில் உள்ளவர்கள் சமயோஜித புத்தியுடன் செயல்பட்டால் லாபம் அதிகரிக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலை பளு அதிகரித்து காணப்படும்.
சிம்மம்:
சிம்மத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய சினம் மற்றவர்களை முகம் சுளிக்க வைக்காமல் இருப்பது நல்லது. கணவன் மனைவி இடையே விட்டுக் கொடுத்து செல்லுதல் நலம் தரும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பாராத அதிரடி மாற்றங்கள் பல வாய்ப்புகளை பெற்று தரும். உத்தியோகஸ்தர்களுக்கு மேலதிகாரிகள் உடைய ஆதரவு கிடைக்க இருக்கிறது.
கன்னி:
கன்னியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய கூட்டு முயற்சி அதிக லாபத்தை கொடுக்கும். சுய தொழிலில் ஈடுபட்டு உள்ளவர்கள் புதிய யுக்திகளை கையாளுவீர்கள். குடும்பத்தில் பிள்ளைகளுடைய எதிர்காலம் பற்றிய திட்டமிடல் மேலோங்கி காணப்படும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் வெளியிட பயணங்களின் பொழுது விழிப்புணர்வுடன் செயலாற்றுவது நல்லது. வேகம் விவேகம் அல்ல!
துலாம்:
துலாத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் எடுக்கக்கூடிய முக்கிய முடிவுகள் உங்களை மட்டும் அல்லாமல் மற்றவர்களையும் திருப்தி படுத்தும். கணவன் மனைவி உறவுக்கு இடையே புதிய புரிதல் ஏற்படும். சுபகாரிய முயற்சிகளில் காலதாமதம் ஏற்படலாம். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு எதிலும் நிதானமும், பொறுமையும் உங்களுக்கு வளர்ச்சியை நோக்கி பயணிக்க செய்யும். சுய தொழிலில் அதிர்ஷ்டம் பெரும் அமைப்பாக இருக்கிறது.
விருச்சிகம்:
விருச்சிகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதிர்பாராத சில விஷயங்கள் உங்களுக்கு குதூகலத்தை ஏற்படுத்தும். உற்றார் உறவினர்களின் ஆதரவு பெருக துவங்கும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு நண்பர்கள் மூலம் அனுகூல பலன்கள் கிட்டும். வேலை தேடி அலைந்து கொண்டிருப்பவர்களுக்கு நினைத்த வேலை கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள் பணியில் கூடுதல் அக்கறையுடன் செயல்படுவது உத்தமம்.
தனுசு:
தனுசில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் ஏற்றம் தரக்கூடிய அமைப்பாக இருப்பதால் நீங்கள் தொட்டதெல்லாம் ஜெயம் ஆகும் இனிய நாளாக இருக்கிறது. சுபகாரிய தடைகள் விலகி பேச்சுவார்த்தைகள் வெற்றியாக முடிவுக்கு வரும். கணவன் மனைவியிடையே சிறு சிறு சண்டை, சச்சரவுகள் அவ்வப்போது தோன்றி மறையும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு எதிர்வரும் தடைகளை சமாளிக்கும் துணிச்சல் பிறக்கும்.
மகரம்:
மகரத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் வெளியூர் தொடர்பான விஷயங்களில் கவனம் தேவை. தேவையற்ற பொருள் இழப்புகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு. ஆரோக்கிய ரீதியான முன்னேற்றம் சிறப்பாக இருக்கும். கணவன் மனைவி இடையே இருக்கும் கருத்து மோதல் மறையும். சுய தொழிலில் மந்த நிலை காணப்படும். உபயோகத்தில் உள்ளவர்களுக்கு சக போட்டியாளர்கள் ஆதரவை பெறுவதில் இடையூறுகள் நீடிக்கும்.
கும்பம்:
கும்பத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்கள் குடும்ப பிரச்சினைகளை பற்றி வெளியில் பகிர்ந்து கொள்ளாமல் இருப்பது நல்லது. கணவன் மனைவி இடையே சிறு சிறு ஊடல் வந்து செல்லும். பெரியவர்களின் ஆலோசனை கேட்டு முடிவு எடுப்பது நல்லது. சுய தொழிலில் உள்ளவர்களுக்கு ஏற்றம் தரும் அமைப்பாக இருக்கிறது. உத்தியோகத்தில் உள்ளவர்கள் தைரியமாக உங்கள் தரப்பு நியாயங்களை முன் வைப்பது நல்லது.
மீனம்:
மீனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் எதிர்பாராத சில விஷயங்கள் நடக்கும். கண்ணால் காண்பதெல்லாம் உண்மை என்று நம்பி விடக்கூடாது. தொலைதூர இடங்களில் இருந்து சுபச் செய்திகள் வரும். கணவன் மனைவி உறவுக்கு இடையே விரிசல் ஏற்பட கூடும் என்பதால் நிதானமாக இருக்க வேண்டும். சுய தொழிலில் சமூகமான சூழ்நிலை காணப்படும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மறைமுக எதிர்ப்புகள் வலுவாகும்.