மேஷம்:
மேஷ ராசியினருக்கு இன்றைய தினம் உடல் நிலையில் பாதிப்புகள் ஏற்பட்டு நீங்கும். தொழில், வியாபாரங்களில் சராசரியான நிலையே காணப்படும். பணவரவுகளில் இழுபறி நிலை இருக்கும். சிலர் வெளியூர் பயணங்களை மேற்கொள்வார்கள்.
ரிஷபம்:
ரிஷப ராசியினருக்கு இன்றைய தினம் தம்பதிகளிடையே ஒற்றுமை அதிகரிக்கும். வீட்டிற்கு தேவையான ஆடம்பர பொருட்களை வாங்குவீர்கள். சகோதர வகையில் சிலருக்கு தனலாபம் ஏற்படும். சுப காரிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.
மிதுனம்:
மிதுன ராசியினருக்கு இன்றைய தினம் உடல் மற்றும் மனநிலையை உற்சாகமாக காணப்படும். பழைய கடன்களை வட்டியுடன் கட்டி முடிப்பீர்கள். வீட்டில் மகிழ்ச்சியான நிலை இருக்கும். பொதுவாழ்வில் இருப்பவர்கள் மக்கள் செல்வாக்கைப் பெறுவார்கள்.
கடகம்:
கடக ராசியினருக்கு இன்றைய தினம் சராசரி தினமாகவே இருக்கும். தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். மாணவர்கள் கல்வியில் சிறப்பார்கள். சிலர் தூரத்து உறவினர் சந்தித்து மகிழ்வீர்கள்.அரசாங்க காரியங்களில் சிறிது தாமதத்திற்கு பிறகு வெற்றி உண்டாகும்.
சிம்மம்:
சிம்ம ராசியினருக்கு இன்றைய தினம் சுமாரான பலன்களைத் தரக் கூடியதாகவே இருக்கும். வெளிநாடு செல்வதற்கான முயற்சிகளில் தடங்கல் ஏற்படும். வாகனங்களில் செல்லும் பொழுது கவனம் தேவை. வீட்டில் இருப்பவர்களுடன் மனஸ்தாபங்கள் ஏற்படலாம்.
கன்னி:
கன்னி ராசியினருக்கு இன்றைய தினம் உற்சாகமானதாக இருக்கும். பணியிடங்களில் மேலதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள். பெண்கள் வழியில் சிலருக்கு தனலாபம் உண்டாகும். வெளியூர் பயணங்களால் லாபம் ஏற்படும்.
துலாம்:
துலாம் ராசியினருக்கு இன்றைய தினம் எதிர்பாராத வகையில் பொருள் விரயம் ஏற்படும். அரசாங்க ரீதியான காரியங்களில் தாமதங்கள் உண்டாகும். கலைஞர்களுக்கு நீண்ட தேடலுக்குப் பிறகு வாய்ப்பு கிடைக்கும். பணவரவுகளில் இழுபறி நிலை நீடிக்கும்.
விருச்சிகம்:
விருச்சிக ராசியினருக்கு இன்றைய தினம் புதிய நபர்களால் பொருள் வரவு ஏற்படும். உடல் மற்றும் மனதளவில் அசதி இருக்கும். மாணவர்கள் கடின முயற்சி செய்தால் மட்டுமே கல்வியில் சிறக்க முடியும். தொழில், வியாபாரத்தில் சராசரியான நிலையே இருக்கும்.
தனுசு:
தனுசு ராசியினருக்கு இன்றைய தினம் எதிர்பார்த்த பண வரவுகள் ஏற்படும். பணியிடங்களில் சிலருக்கு கூடுதல் சுமை ஏற்படும். தம்பதிகள் இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். ஒரு சிலர் ஆன்மீக தலங்களுக்கு சென்று வருவார்கள்.
மகரம்:
மகர ராசியினருக்கு இன்றைய தினம் உற்சாகமானதாக இருக்கும். நண்பர்கள் வழியில் சிலருக்கு லாபங்கள் உண்டாகும். கோர்ட்டு வழக்குகளில் சாதகமான நிலை ஏற்படும். ஒரு சிலருக்கு எதிர்பாராத வகையில் தன லாபம் உண்டாகும்.
கும்பம்:
கும்ப ராசியினருக்கு இன்றைய தினம் சிறப்பானதாக இருக்கும். வெளியூர் வெளிநாடுகளில் இருந்து எதிர்பார்த்த செய்தி கிடைக்கப் பெறுவார்கள். சிலர் புதிய வீடு, சொத்துக்கள் வாங்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். உறவினர்கள் மத்தியில் செல்வாக்கு உயரும்.
மீனம்:
மீன ராசியினர் இன்றைய தினம் பழைய கடன்களை வட்டியுடன் கட்டி முடிப்பார்கள். ஒருசிலருக்கு உடல் நல பாதிப்புகள் ஏற்பட்டு நீங்கும். சிலர் புனித தலங்களுக்கு சென்று வருவார்கள். தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த பணவரவு இருக்கும்.