மேஷம்:
மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் அனுகூலம் தரும் அற்புதமான நாளாக அமைய இருக்கிறது. சுகபோக வாழ்க்கைக்கு உரிய பாதை தென்படும். கணவன்-மனைவி பிரச்சினைகளை பெரிதாக்காமல் விட்டு கொடுத்து செல்வது நல்லது. சுய தொழிலில் ஏற்றம் காணும். உத்தியோகஸ்தர்களுக்கு பொறுமை தேவை.
ரிஷபம்:
ரிஷப ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் ஒன்று நினைத்தது ஒன்று நடக்கும். தேவையில்லாத எதிர்பார்ப்புகளை குறைத்துக் கொள்வது உத்தமம். கணவன் மனைவி ஒற்றுமைக்கு குறைவிருக்காது. குடும்பத்தில் அமைதி நிலவும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு கூடுதல் பொறுப்புகள் அதிகரிக்கும். சுய தொழில் செய்பவர்களுக்கு வீண் அலைச்சல் ஏற்படலாம்.
மிதுனம்:
மிதுன ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் அனுகூலமான பலன்கள் உண்டு. பொன் பொருள் சேரும் யோகம் காணப்படுகிறது. சுய தொழில் புரிபவர்களுக்கு லாபம் அதிகரிக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு கூடுதல் பொறுப்புகள் சுமையை ஏற்படுத்தும் என்பதால் டென்ஷன் காணப்படலாம். பொருளாதார ரீதியான முன்னேற்றம் வீட்டுத் தேவைகளை எளிதில் பூர்த்தி செய்யும்.
கடகம்:
கடக ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாளில் கடமையில் கூடுதல் அக்கறை தேவை. அலட்சியம் பல இழப்புகளை சந்திக்க கூடிய வாய்ப்புகளை சேர்க்கும். வெளியிட பயணங்களின் பொழுது கவனமாக இருங்கள். சுய தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு சுற்றி இருப்பவர்களின் உண்மை குணத்தை புரிந்து கொள்ளும் வாய்ப்புகள் அமையும்.
சிம்மம்:
சிம்ம ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் மிகவும் மகிழ்ச்சி நிறைந்த நாளாக அமைய இருக்கிறது. நீங்கள் முக்கிய முடிவுகளை எடுப்பதில் கவனம் செலுத்துவது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்கள் சூழ்நிலை அறிந்து செயல்படுவார்கள். கணவன் மனைவி உறவில் புரிதல் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு வருமானம் அதிகரிக்கும்.
கன்னி:
கன்னி ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் அனுபவம் தரக்கூடிய அமைப்பு என்பதால் நீங்கள் தொட்டதெல்லாம் துலங்கும். தடைபட்ட காரியங்கள் கைகூடி வரும். வேண்டாம் என்று விட்டு சென்றவர்கள் மீண்டும் உங்களை தேடுவார்கள். கணவன் மனைவி ஒற்றுமை சிறப்பாக இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் பண ரீதியான விஷயத்தில் எதிர்பார்ப்புகளை பூர்த்தி அடையும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு பொறுமை தேவை.
துலாம்:
துலாம் ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நல்ல பலன் தரக்கூடிய அமைப்பு என்பதால் உற்சாகத்திற்கு குறைவிருக்காது. கணவன் மனைவி உறவில் அன்னோன்யம் கூடும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்கள் சகோதர வழியில் அனுகூல பலன் பெறுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு தேவையில்லாத பயம் நீங்கும்.
விருச்சிகம்:
விருச்சிக ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் ஏற்றம் தரக்கூடிய அமைப்பு என்பதால் எடுக்கக்கூடிய முயற்சியில் தளர்வுகள் இல்லாமல் பார்த்துக் கொள்வது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் மறைமுக எதிரிகளின் அட்டகாசம் எரிச்சல் ஊட்டுவதாக இருக்கும். உத்யோகஸ்தர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள்.
தனுசு:
தனுசு ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் தடைகளைத் தாண்டி முன்னேற கூடிய நல்ல நாளாக அமைய இருக்கிறது. கணவன் மனைவி ஒற்றுமை பலப்படும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்கள் கூடுதல் பொறுப்புகளை சுமக்க நேரிடும். உத்தியோகஸ்தர்களுக்கு திறமைக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும். புதிய தொழில் துவங்குபவர்களுக்கு சாதக பலன் உண்டு.
மகரம்:
மகர ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் மனதிற்கு பிடித்த நல்ல நிகழ்வுகள் நடைபெறும். கணவன் மனைவி உறவில் இருந்து வந்த குழப்பங்கள் தீரும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்கள் அனுகூல பலன் பெறுவார்கள். விட்டு சென்ற ஒப்பந்தங்கள் தானாகவே கைக்கு வரும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு திடீர் அதிர்ஷ்டம் ஏற்படலாம்.
கும்பம்:
கும்ப ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் சாதகமற்ற அமைப்பு என்பதால் கூடுதல் கவனம் தேவை. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்கள் தங்களுடைய பணியில் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு சக போட்டியாளர்கள் எதிர்த்து வெற்றி அடையும் வாய்ப்புகள் அமையும். தெரியாத விஷயங்களை கற்றுக் கொள்ள முனைவீர்கள்.
மீனம்:
மீன ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் இனிய நாளாக இருப்பதால் மகிழ்வுடன் காணப்படுவீர்கள். இன்றைய நாளின் பிற்பகுதியில் நீங்கள் சுபச் செய்திகளை பெறுவீர்கள். கணவன்-மனைவிக்குள் சண்டை சச்சரவுகள் இல்லாமல் பார்த்துக் கொள்வது நல்லது. வெளியிட பயணங்களின் பொழுது கவனம் தேவை. உற்றார் உறவினர்களின் ஆதரவு பெருகும். வருமானம் இரட்டிப்பாகும்.