மேஷம்:
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மனதில் இருக்கும் குழப்பங்கள் எல்லாம் தீரும். தொழில் மற்றும் வியாபார ரீதியான முன்னேற்றம் சிறப்பாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நீண்ட நாள் நிலுவையிலிருந்த சில கடன் பாக்கிகள் வசூலாகும். தேவையற்ற ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. கணவன் மனைவி ஒற்றுமை சிறப்பாக இருக்கும். ஆரோக்கியம் மேம்படும்.
ரிஷபம்:
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் நினைப்பதற்கு எதிர்மறையாக சில விஷயங்கள் நடக்க வாய்ப்புகள் உண்டு. மூன்றாம் மனிதர்களை நம்பி புதிய பொறுப்புகளை ஒப்படைப்பதில் கவனம் செலுத்த வேண்டும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு சக பணியாளர்கள் மூலம் ஒத்துழைப்பு கிடைத்து அனுகூலமான பலன்களை பெறுவீர்கள். சமயோஜிதமாக செயல்பட்டால் நினைத்ததை அடையும் யோகம் உண்டு.
மிதுனம்:
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் வாழ்க்கையை முன்னெடுத்துச் செல்லக்கூடிய சில விஷயங்களை நோக்கி பயணம் செய்வீர்கள். பெரிய மனிதர்களின் ஆதரவு கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு சக போட்டியாளர்கள் வலு பெற வாய்ப்புகள் அதிகம். உங்களுடைய விடாமுயற்சியை கொடுக்கக் கூடிய நாளாக அமைய இருக்கிறது. குடும்பத்தில் குதூகலமான நிகழ்வுகள் நடைபெறும். ஆரோக்கியத்தை கவனியுங்கள்.
கடகம்:
கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எடுத்தோம் கவிழ்த்தோம் என்று எதையும் செய்யக்கூடாது. குடும்பத்தில் இருக்கும் மூத்தவர்களிடம் ஆலோசனையை கேட்டு முடிவெடுப்பது நல்லது. புதிய தொழில் துவங்க நினைப்பவர்களுக்கு சாதகமான பலன்கள் உண்டாகும். கணவன் மனைவி இடையே இருந்த சண்டை சச்சரவுகள் நீங்கி பரஸ்பர ஒற்றுமை மேலோங்கி காணப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணிச்சுமை அதிகரிக்க வாய்ப்புகள் உண்டு.
சிம்மம்:
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்கள் வாடிக்கையாளர்கள் இடத்தில் நன் மதிப்பைப் பெற போராடுவீர்கள். கணவன் மனைவிக்கு இடையே இருக்கும் நெருக்கம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு அதிகரித்தாலும் உத்வேகத்துடன் செயல்படுவீர்கள். ஆரோக்கிய ரீதியான பாதிப்புகள் குறையும்.
கன்னி:
கன்னி ராசக்காரர்களுக்கு இன்றைய நாள் உற்றார் உறவினர்களின் ஆதரவு கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு அனுகூலமான பலன்கள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு, எதிர்பார்க்கும் வருமானம் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு இடமாற்றம், ஊதிய உயர்வு போன்றவற்றில் சாதகமான பலன்கள் உண்டாகும். வெளிநாடு தொடர்புடைய விஷயங்களில் சுபச் செய்திகள் கிடைக்கப் பெறுவீர்கள்.
துலாம்:
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் இனிய நாளாக அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு கொடுக்கல் வாங்கல் பிரச்சினைகள் வலுவாகும் என்பதால் கவனம் தேவை. உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. வேலையில் மட்டும் கவனம் செலுத்தினால் உத்தமம். கணவன் மனைவி இடையே ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு நடந்து கொள்வது நல்லது.
விருச்சிகம்:
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் எதிர்பார்ப்பதை விட சிறப்பான நாளாக அமைந்துள்ளது. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு கூட்டாளிகள் மூலம் அனுகூலமான பலன்களை பெறுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேல் அதிகாரிகளுடன் இணக்கம் ஏற்படும். ஆரோக்கியம் சீராக இருக்கும். விநாயகரை வழிபடுங்கள்.
தனுசு:
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் எதிர்பார்க்கும் நன்மைகள் நடைபெறக்கூடிய நல்ல நாளாக அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபார ரீதியான முன்னேற்றம் சிறப்பாக இருக்கும். கணவன் மனைவிக்கு இடையே இருக்கும் கருத்து வேறுபாடுகள் மறையும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு பணிச்சுமை குறையும். குடும்பத்தில் பெரியவர்களின் ஆசீர்வாதம் கிடைக்கும். சுபச் செய்திகள் மனதிற்கு மகிழ்ச்சியை உண்டாக்கும் வகையில் அமையும்.
மகரம்:
மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எல்லா வகையான நன்மைகளும் கிடைக்கும் அற்புதமான நாளாக அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு எதிர்பாராத அரசு வகை காரியங்கள் அனுகூலமாகும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு தேவையற்ற பயணங்கள் மூலம் பிரச்சனைகள் ஏற்படலாம் எனவே கவனத்துடன் இருப்பது நல்லது. கணவன் மனைவிக்கு இடையே புரிதல் உண்டாகும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள்.
கும்பம்:
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் குடும்பத்தில் அமைதி நிலவும். தொழில் மற்றும் வியாபாரத்தில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு எதிர்பார்க்கும் அளவிற்கு வருமானம் பெருகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சக போட்டியாளர்கள் மத்தியில் மதிப்பும் மரியாதையும் உயரும். கணவன் மனைவிக்கு இடையே இருக்கும் பிரச்சினைகள் தீர்ந்து பரஸ்பர ஒற்றுமை நீடிக்கும். ஆரோக்கியத்தை கவனியுங்கள்.
மீனம்:
மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிலும் முன்னேற்றம் நிச்சயம் உண்டாகும். தொட்டதெல்லாம் துலங்க கூடிய அற்புதமான நாளாக அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு புதியபாதை தென்படும் அற்புத நாளாக அமைய இருக்கிறது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நீண்ட நாள் கனவுகள் நிறைவேறும். வெளியிட பயணங்களில் கவனம் தேவை. ஆரோக்கியத்தில் படிப்படியாக முன்னேற்றம் உண்டு.