மேஷம்:
மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் வைராக்கியத்துடன் செயல்படக்கூடிய நல்ல நாளாக அமைய இருக்கிறது. சுய தொழிலில் இருப்பவர்களுக்கு எதிர்பார்க்கும் ஆதாயம் காணலாம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் தங்கள் பணிகளை செவ்வனே செய்து பாராட்டினை பெறுவார்கள். ஆரோக்கிய ரீதியாக பாதிப்புகள் குறையும்.
ரிஷபம்:
ரிஷப ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய முழு முயற்சியையும் ஈடுபடுத்தக் கூடிய நல்ல நாளாக அமைய இருக்கிறது. சோம்பல் தனத்தை இப்பொழுது உங்கள் வேலையை சரியாக செய்தால் நன்மதிப்பு பெறலாம். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு ஏற்றமான பொருளாதார சூழ்நிலை இருக்கும். சுய தொழிலில் இருப்பவர்களுக்கு அதிக பொறுமை தேவை.
மிதுனம்:
மிதுன ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் உண்டு உங்கள் வேலை உண்டு என்று இருப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சாதகமற்ற அமைப்பு என்பதால் தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்ப்பதும் மூலம் மன அமைதி காணலாம். சுய தொழில் இருப்பவர்கள் வெளியிட போக்குவரத்து வெளியில் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.
கடகம்:
கடக ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய செயல்பாட்டில் கூடுதல் கவனத்துடன் இருப்பது நல்லது. எந்த ஒரு விஷயத்தையும் ஒன்றுக்கு இரண்டு முறை சிந்தித்துச் செயலாற்றுவது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் உடைய குணநலன்கள் அடிக்கடி மாறும் தன்மையுடன் இருப்பதால் கூடுமானவரை விழிப்புணர்வுடன் இருப்பது நல்லது.
சிம்மம்:
சிம்ம ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் சாதகமற்ற அமைப்பு என்பதால் சுபகாரியத் தடைகள் ஏற்படலாம். செய்யும் செயலில் நிதானத்துடன் இருப்பது உத்தமம். கணவன் மற்றும் மனைவி இடையே இருக்கும் கருத்து வேறுபாடுகள் நீங்கும். சுயதொழில் எதிர்பார்க்கும் லாபம் உண்டு. உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு மேலதிகாரிகளின் நட்புறவை ஏற்படும்.
கன்னி:
கன்னி ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் குடும்பத்தில் இருந்து வந்த குழப்பங்கள் தீர்ந்து மன அமைதி இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்கள் வெளியிடங்களில் நட்புறவுடன் இருப்பது நல்லது. புதிய நட்பு வட்டம் உங்களுக்கு ஏற்றத்தைக் கொடுக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பகை அதிகரிக்கும்.
துலாம்:
துலாம் ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் அநியாயத்தை தட்டிக் கேட்கக் கூடிய ஒரு அமைப்பாக இருப்பதால் நிதானம் தேவை. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்க்கும் சலுகைகள் கிடைக்கும். வேலை தேடி அலைந்து கொண்டிருந்தவர்களுக்கு நல்ல வேலை அமையும். ஆரோக்கியத்தை கவனியுங்கள்.
விருச்சிகம்:
விருச்சிக ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய நியாயமான கோரிக்கைகள் நிறைவேறக் கூடிய நல்ல நாளாக அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு பொருளாதார ரீதியான முன்னேற்றம் சிறப்பாக இருக்கும் என்பதால் குடும்பத் தேவைகளை எளிதில் பூர்த்தி செய்து விடுவீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு அனுகூல பலன் உண்டாகும்.
தனுசு:
தனுசு ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் சாதகமற்ற அமைப்பு என்பதால் கூடுமானவரை வெளியிட பயணங்களின் போது கவனத்துடன் இருப்பது நல்லது. குடும்பத்தில் தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்த்து பொறுமையுடன் இருப்பது முக்கியம். சுய தொழிலில் லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அமைதி தேவை தேவையற்ற வாக்குவாதம் தேவையற்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
மகரம்:
மகர ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் மனதில் இருக்கும் குழப்பங்களுக்கான விடை கிடைக்கக் கூடிய நல்ல நாளாக அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு போட்டியாளர்களாக அதிகரிக்கும். சக பணியாளர்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு அதிகாரிக்கும்.
கும்பம்:
கும்ப ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் குடும்பத்தில் குதூகலமான சூழ்நிலை காணப்படும். தடைப்பட்ட சுப காரிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேலதிகாரிகளின் தொந்தரவு ஏற்பட்டு மறையும். சுய தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு போட்டியாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்
மீனம்:
மீன ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் குடும்பத்தில் திடீர் அதிர்ஷ்டம் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு நெளிவு சுளிவுகளை கற்றுக் கொள்ளும் பாக்கியம் அமையும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. உணவு கட்டுப்பாடு மேற்கொள்வது ஆரோக்கியத்தை பாதுகாக்க உதவும்.