மேஷம்:
மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் நினைத்ததை சாதிக்கும் நல்ல நாளாக அமைய இருக்கிறது. சுயதொழிலில் நாங்கள் எதிர்பார்த்ததை விட அதிக லாபம் காணலாம். உத்யோகத்தில் உள்ளவர்களுக்கு அதிகம் பொறுமை தேவைப்படக்கூடிய நாளாக இருக்கும். கணவன் மனைவி உறவில் விரிசல் ஏற்பட வாய்ப்புகள் இருப்பதால் விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது.
ரிஷபம்:
ரிஷப ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எங்கள் அதிகம் பொறுமையுடன் இருக்க வேண்டிய அவசியமாகிறது. சாதகமற்ற அமைப்பு என்பதால் முக்கிய முடிவுகள் எடுப்பதை தள்ளி வைப்பது நல்லது. உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு மன அமைதி இருக்கும். சுய தொழிலில் புதிய வாய்ப்புகளைப் பெறுவீர்கள். வெளியிட பயணங்களில் கவனம் தேவை.
மிதுனம்:
மிதுன ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதிர்பார்த்தது ஒன்று நடப்பது ஒன்றாக இருக்கலாம். சுய தொழிலில் இருப்பவர்கள் புதிய பணியாளர்கள் மீது கவனம் செலுத்துவது நல்லது. உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு மேல் அதிகாரிகளுடன் இணக்கம் தேவை. குடும்பத்தில் கணவன் மனைவி பிரச்சனை க்கு இடையே மற்றவர்களை அனுமதிக்காமல் இருப்பது நல்லது.
கடகம்:
கடக ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் அற்புத நாளாக அமைய இருக்கிறது. சுயதொழில் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும் மேலும் அதிக லாபம் காண புதிய உத்திகளை கையாளுவது நல்லது. கணவன் மனைவியிடையே அன்பு அதிகரிக்கும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு சக தொழிலாளர்கள் மத்தியில் பெருமிதம் உண்டாகும்.
சிம்மம்:
சிம்ம ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்கள் திறமையை மற்றவர்களுக்கு தெரியபடுத்த கூடிய வாய்ப்புகள் கிடைக்கும். சுய தொழிலில் உள்ளவர்கள் தங்கள் பணிகளில் கூடுதல் அக்கறை செலுத்துவது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு தன்னம்பிக்கை அதிகரித்து காணப்படும். ஆரோக்கிய ரீதியாக பாதிப்புகள் குறையும்.
கன்னி:
கன்னி ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் தங்கள் கடமையில் கூடுதல் அக்கறை செலுத்துவது நல்லது. கணவன் மனைவி இடையே இருந்து வந்த மனக்கசப்புகள் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும். சுயதொழிலில் இருப்பவர்களுக்கு மந்த நிலை காணப்படும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பார்க்கும் உதவிகள் கிடைக்கும். பொருளாதார ரீதியான முன்னேற்றம் சிறப்பாக இருக்கும்.
துலாம்:
துலாம் ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்கள் தேவைகளை நிறைவு செய்யும் வாய்ப்புகள் உண்டு. பொருளாதார முன்னேற்றம் அடையும். சுய தொழிலில் இருப்பவர்களுக்கு தங்கள் உழைப்பின் மீது கர்வம் உண்டாகும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் தங்கள் போட்டியாளர்களுடன் இருந்து வந்த சண்டை சச்சரவுகள் நீங்கும்.
விருச்சிகம்:
விருச்சிக ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் விருந்தினர் வருகை ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. குடும்பத்தில் குதூகலம் நிலவும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பணிச்சுமை அதிகரிக்கும் என்பதால் டென்ஷன் காணப்படும். தொழில் மற்றும் வியாபாரம் சிறப்பாக இருக்கும். பெரிய தொகைகளை ஈடுபடுத்தி அதிக லாபம் காணலாம். போக்குவரத்து தொடர்பான விஷயங்களில் கவனம் செலுத்தவும்.
தனுசு:
தனுசு ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நினைத்ததை சாதித்துக் காட்டுவீர்கள். சுபகாரிய முயற்சிகளில் வெற்றி அடைவீர்கள். கணவன் மனைவி இடையே இருக்கும் பிரச்சினைகள் நீங்கும். சுய தொழிலில் இருப்பவர்களுக்கு வாடிக்கையாளர்களின் நன்மதிப்பை பெறும் யோகம் உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு தங்கள் பணிகளில் அக்கறை ஏற்படும்.
மகரம்:
மகர ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் ஆரோக்கிய ரீதியாக பாதிப்புகள் வந்து நீங்கும். சுய தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு எந்த ஒரு முக்கிய முடிவுகளையும் தள்ளி வைப்பது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்கள் தங்கள் மேல் அதிகாரிகளுடன் இருந்து வந்த பிரச்சினைகளை தீர்த்துக் கொள்ள முயற்சி செய்வீர்கள். புதிய சொத்துக்கள் வாங்கும் முயற்சிகளில் கவனம் தேவை.
கும்பம்:
கும்ப ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் குடும்பத்தில் அமைதி நிலவும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு அதிகரிக்க வாய்ப்புகள் உண்டு. கணவன் மனைவியிடையே இருந்து வந்த சிறு சிறு ஊடல்கள் நீங்கும். புதிய தொழில் தொடங்க நினைப்பவர்களுக்கு எதிர்பார்க்கும் நல்ல லாபம் உண்டாகும். பிள்ளைகள் வழியில் சுபச் செய்திகள் கிடைக்கப் பெறுவீர்கள்.
மீனம்:
மீன ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் மகிழ்ச்சி ஏற்படும். தடைப்பட்ட சுபகாரியங்கள் முடிவுக்கு வரும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு தன்னம்பிக்கை அதிகரித்து காணப்படும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு நேர்மையாக சிந்தனைகள் மேலோங்கி காணப்படும். பெண்களுக்கு புதிய உத்வேகம் பிறக்கும். சகோதர சகோதரிகளுக்கு இடையே இருந்த மனக்கசப்புகள் நீங்கும்.