மேஷம்: மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் இனிய நாளாக அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபார ரீதியான முன்னேற்றம் இப்படியாக சீராகி வரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பள்ளி நண்பர்கள் அறிமுகம் கிடைக்கும். கணவன் மனைவிக்கு இடையே இருக்கும் சிறு சிறு பிரச்சினைகள் நீங்கும். குடும்பத்துடன் செலவிடக் கூடிய நாளாக இருக்கும்.
ரிஷபம்:
ரிஷப ராசியில் பிறந்தவர்களுக்கு இன்றைய நாள் உடன் பிறந்தவர்கள் மூலம் அனுகூலம் பலன்களை பெற இருக்கிறீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு மந்த நிலை காணப்பட்டாலும் பொருள் தேக்கம் ஏற்படாது. உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு வெளியிட பயணங்களின் மூலம் அனுகூலமான பலன்கள் உண்டாகும். உங்கள் நட்பு வட்டம் விரிவடையும். ஆரோக்கியத்தில் எச்சரிக்கை தேவை.
மிதுனம்:
மிதுன ராசியில் பிறந்தவர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் நினைப்பதற்கு எதிர்மறையாக சில விஷயங்கள் நடக்க வாய்ப்புகள் உண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு ஊழியர்கள் மூலம் அனுகூலமான பலன்கள் உண்டாகும். உத்யோகத்தில் இருப்பவர்கள் பணி சுமை குறையும். குடும்பத்தில் பெரிய மனிதர்களுடைய ஆசீர்வாதத்தை பெற்றுக் கொள்வது நல்லது. பிள்ளைகள் வழியில் சுபச் செய்திகள் கிடைக்கும்.
கடகம்:
கடக ராசியில் பிறந்தவர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாளாக அமைகிறது. நீங்கள் நினைத்ததை சாதித்துக் காட்டுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு விடாப்பிடியாக முயன்று சில விஷயங்களை பெற வேண்டியிருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு பண ரீதியான விஷயங்களில் கவனம் தேவை. வெளியிட பயணங்களின் மூலம் மனதிற்கு இதமான உணர்வு உண்டாகும்.
சிம்மம்:
சிம்ம ராசியில் பிறந்தவர்களுக்கு இன்றைய நாள் உற்சாகம் தரும் அமைப்பை பெற இருக்கிறீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு நீங்கள் எதிர்பார்க்கும் சில விஷயங்களில் எதிர்மறையாக நடைபெற வாய்ப்புகள் உண்டு. உத்யோகத்தில் இருப்பவர்கள் கூடுமானவரை விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டியது அவசியமாகும். திடீர் அதிர்ஷ்டம் வந்து சேர வாய்ப்புகள் உண்டு. நினைத்ததை வாங்கி காட்டுவீர்கள்.
கன்னி:
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் கடமையே கண் கண்ட தெய்வமாக நினைத்து விடாமுயற்சியுடன் செயல் ஆற்றும் நாளாக அமைய இருக்கிறது. தடைப்பட்ட சுப காரிய முயற்சிகளில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு வெற்றி கிடைக்கும். தொழில் மற்றும் வியாபார ரீதியான பிரச்சனைகள் தீரும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு நீண்ட நாள் கனவுகள் நிறைவேறும். ஆரோக்கியம் வளமாகும்.
துலாம்: துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் குடும்பத்துடன் நேரத்தை செலவிட கூடிய அற்புதமான நாளாக அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் கொடுக்கல்-வாங்கல் பிரச்சனைகள் மேலும் வலுவாக்கும் என்பதால் கூடுமானவரை விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்ப்பது, மௌனம் காப்பது மிகவும் நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணிச்சுமை குறையும். ஆரோக்கியம் மேம்படும்.
விருச்சிகம்:
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எடுத்தோம் கவிழ்த்தோம் என்று எதையும் செய்வதை தவிர்ப்பது உத்தமம். கணவன் மனைவிக்கு இடையே இருந்து வந்த குழப்பங்கள் தீரும். சகோதர சகோதரிகளுக்கு இடையே இருந்த மனக்கசப்புகள் நீங்கி ஒற்றுமை பலப்படும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு வெளியிட பயணங்கள் மூலம் உற்சாகம் கிடைக்கும். மனசஞ்சலம் தீர இறை வழிபாடு மேற்கொள்வது நல்லது.
தனுசு:
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உடல் ரீதியான முன்னேற்றம் குறையும். உடல் அசதியாக இருப்பது போன்ற உணர்வு ஏற்படும். தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்களுக்கு வரவை விட செலவு அதிகமாக இருக்க வாய்ப்புகளுண்டு. உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு பொருளாதார ரீதியான பிரச்சனைகளை சமாளிக்கும் திறமை வளரும். உறவினர்கள் மூலம் சுபச் செய்திகள் கிடைக்கப் பெறும்.
மகரம்:
மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எத்தகைய சவால்களையும் எதிர்கொள்ளும் தன்னம்பிக்கை பிறக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு சக போட்டியாளர்கள் வலுவாக வாய்ப்புகள் உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்கள் விடாமுயற்சியுடன் செயல்பட்டால் விஸ்வரூப வெற்றியை ஈட்டுவீர்கள். ஆரோக்கிய ரீதியான வீண் விரயங்கள் ஏற்படாமல் இருக்க உணவு கட்டுப்பாடு மேற்கொள்வது நல்லது.
கும்பம்:
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் ஒன்று நினைக்க அது ஒன்று நடக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு பண வரவு சிறப்பாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் உடைய நீண்ட நாள் கனவுகள் நிறைவேறும். தடைபட்ட சில விஷயங்கள் முடிவுக்கு வரும். கிடைக்கவில்லையே என்று நினைத்த சலுகைகள் கிடைக்கும். எதிலும் பொறுமையை கையாண்டால் மன நிம்மதி நிச்சயம் உண்டாகும்.
மீனம்:
மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் முகத்தில் பொலிவு உண்டாகும். இதற்கு பிடித்தவர்கள் மூலம் நல்ல செய்திகளை பெறுவீர்கள். வெளியிட பயணங்களை மேற்கொள்வது, நேரத்தை செலவிடுவது மனதிற்கு உற்சாகத்தை ஏற்படுத்தும். பொருளாதார ரீதியான ஏற்ற இறக்கங்களை திறம்பட சமாளிப்பீர்கள். எதையும் எடுத்தோம் கவிழ்த்தோம் என்று செய்யாமல் நின்று நிதானமாக ஆலோசித்து பின்னர் முடிவெடுப்பது நல்லது. ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள்.