மேஷம்:
மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதிர்பார்க்கும் நன்மைகள் நடைபெறக்கூடிய நல்ல நாளாக அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு நீங்கள் நினைத்ததை விட லாபம் பன்மடங்கு பெருகும். பொருளாதார முன்னேற்றம் சிறப்பாக அமையும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பண தடை அகலும். எதிர்பார்க்கும் சலுகைகள் கிடைக்கும். ஆரோக்கியத்தில் குறை இருக்காது.
ரிஷபம்:
ரிஷப ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதிர்வரும் எத்தகைய பிரச்சினைகளையும் எளிதாக சமாளிக்கும் திறன் பிறக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு நீங்கள் நினைத்த அளவிற்கான லாபத்தை காணலாம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பாராத அதிர்ஷ்டம் உண்டாகும். உத்தியோக உயர்வு, ஊதிய உயர்வு போன்ற விஷயங்களை சாதக பலன்களை பெறுவீர்கள். கணவன்-மனைவி இடையே அன்பு பெருகும்.
மிதுனம்:
மிதுன ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்கள் சுயமரியாதையை விட்டுக் கொடுக்காமல் நடந்து கொள்வீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு அதன் விரிவாக்கத்தை பற்றிய சிந்தனை மேலோங்கி காணப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த பணவரவு சிறப்பாக அமைய இருக்கிறது. கணவன் மனைவிக்கு இடையே இருந்த நெருடல்கள் நீங்கும்.
கடகம்:
கடக ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்கள் உணர்வுகளை குடும்பத்தினர் எளிதாக புரிந்து கொள்ளும் சூழ்நிலை காணப்படும். தொழில் மற்றும் வியாபாரத்தில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு வெளிநாடு செல்லக்கூடிய வாய்ப்புகள் அமையலாம். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்க்கும் விஷயங்கள் காலதாமதம் ஆனாலும் வெற்றி நிச்சயம் உண்டாகும். இடமாற்றம் குறித்த விஷயங்களில் ஆலோசனை மேற்கொள்வது நடக்கும்.
சிம்மம்:
சிம்ம ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்கள் வாழ்க்கை தரம் உயர அதற்கான சூழ்நிலை காணப்படும். பாதியில் முடிக்கப்பட்ட வீட்டு கட்டுமான வேலைகளை விரிவுபடுத்தும் எண்ணம் மேலோங்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் ஆடம்பர செலவுகளை தவிர்ப்பதன் மூலமாக நன்மைகளை பெறலாம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நீங்கள் நினைத்ததை சாதிக்க கூடிய நாளாக இருக்கும்.
கன்னி:
கன்னி ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்கள் அனுபவம் நல்லதொரு பலனை கொடுக்க இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் ஈடுபட்ட உள்ளவர்களுக்கு குடும்பத்துடன் வெளியிட பயணங்களை மேற் கொள்வதற்கான வாய்ப்புகள் அமையும். உத்யோகத்தில் இருப்பவர்கள் தங்கள் பொருளாதார நிலையை உயர்த்திக் கொள்ள முயற்சி செய்வீர்கள். எதிர்பாராத இடங்களிலிருந்து பண வரவு இருக்கும்.
துலாம்:
துலாம் ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் தடைப்பட்ட வேலைகளை முன்னெடுத்து நடத்தி காட்டுவீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் பொருளாதார ரீதியான முன்னேற்றத்துடன் இருப்பதால் வீட்டு தேவைகளை எளிதில் பூர்த்தி செய்து விடுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மற்றவர்களை எளிதாக கவர்ந்து விடுவீர்கள், அவர்களுடைய ஆதரவையும் பெறுவீர்கள். ஆரோக்கிய ரீதியான முன்னேற்றம் சிறப்பாக இருக்கும்.
விருச்சிகம்:
விருச்சிக ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் மறைமுகப் போட்டிகளை எளிதாக சமாளித்து வெற்றி காணும் நல்ல நாளாக அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு எதிர்பாராத லாபம் பெருகும். வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை கணிசமாக உயரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உடல் உபாதைகள் ஏற்படும் என்பதால் விஷயத்தில் கூடுதல் அக்கறை செலுத்துவது நல்லது. குடும்பத்தில் குதூகலத்துடன் காணப்படும்.
தனுசு:
தனுசு ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் நினைத்த விஷயங்களில் காலதாமதமான பலன்கள் ஏற்பட்டாலும் வெற்றி நிச்சயம் உண்டாகும். தடைப்பட்ட சுப காரிய முயற்சிகளில் வெற்றி காணும் யோகம் உண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு உங்கள் அணுகுமுறை சிறந்த பலன்களைக் கொடுக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் தாங்கள் குடும்பத்துடன் நேரத்தை செலவிட கூடிய அற்புதமான நாளாக அமைய இருக்கிறது. ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துங்கள்.
மகரம்:
மகர ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் திடீர் பயணங்களை மேற் கொள்வதற்கான வாய்ப்புகள் அமையும். தொழில் மற்றும் வியாபாரத்தில் ஈடுபட்ட உள்ளவர்களுக்கு எதிர்பாராத அதிர்ஷ்டம் கதவை தட்டும். பொருளாதார ரீதியான முன்னேற்றம் சிறப்பாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சக பணியாளர்களை அனுசரித்து செல்வது நல்லது. குடும்பத்தில் இருக்கும் பிரச்சினைகள் தீர்ந்து ஒற்றுமை மேலோங்கும். பூர்வீக சொத்துக்கள் அனுகூல பலன் தரும்.
கும்பம்:
கும்ப ராசியில் பிறந்தவர்களுக்கு இன்றைய நாள் உங்களுடைய நட்பு வட்டம் விரிவடையும். முன்பின் தெரியாத அவர்களுடைய அறிமுகத்தை தவிர்த்துக் கொள்வது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் பெரிய தொகை ஈடுபடுத்தி அதிக லாபம் காணலாம். உத்யோகத்தில் உள்ளவர்களுக்கு தேவையற்ற பிரச்சனைகள் ஏற்படும் என்பதால் உங்கள் அந்தரங்க விஷயங்களை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ளாமல் இருப்பது நல்லது. பெண்களுக்கு கூடுதல் பணிச்சுமை இருக்கும்.
மீனம்:
மீன ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் எடுக்கும் முயற்சியில் வெற்றி காணும் யோகம் உண்டு. மனதிற்கு பிடித்தவர்களை மணந்து கொள்ளும் பாக்கியம் உண்டாகும். தொழில் மற்றும் வியாபார ரீதியான முன்னேற்றம் சிறப்பாக இருக்கும். புதிய பணியாளர்களை அமர்த்தும் எண்ணத்தில் இருப்பீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உடல்நல பிரச்சனைகள் ஏற்படும் என்பதால் கூடுதல் கவனம் இருப்பது நல்லது. கணவன் மனைவிக்கு இடையே இருக்கும் கருத்து வேறுபாடுகள் நீங்கும்.