மேஷம்:
மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த நாள் சந்தோஷமான நாளாகத்தான் இருக்க போகின்றது. வேலை செய்யுமிடத்தில் பாராட்டுக்கள் கிடைக்கும். சொந்தத் தொழிலில் எதிர்பாராத லாபத்தை அடைவீர்கள். அற்புதமான சந்தோஷமான இந்த நன்னாளில் இறைவனுக்கு நன்றி சொல்ல மறவாதீர். குடும்பத்தோடு குல தெய்வ வழிபாட்டை வீட்டிலிருந்தபடியே மேற்கொள்ளலாம்.
ரிஷபம்:
ரிஷப ராசிக்காரர்கள் இன்றைய நாள் கொஞ்சம் கவனமாக இருந்து விட்டால் போதும். பெரியதாக எந்த ஒரு பிரச்சனையும் இருக்காது. வேலை செய்யும் இடத்தில் கூடுதல் கவனத்தோடு வேலை செய்யவேண்டும். முன்கூட்டியே உங்களுடைய வேலையை முடித்து விடுங்கள். கடைசி நேரம் வரை எடுத்துச் செல்லாதீர்கள். பணம் காசு சம்பந்தப்பட்ட விஷயங்களில் கொஞ்சம் உஷாராக இருக்க வேண்டும்.
மிதுனம்:
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் வெற்றி தரக்கூடிய நாளாக இருக்கப் போகின்றது. புதிய முயற்சிகளைத் தொடங்கலாம். சொந்தத் தொழிலை விரிவு படுத்தலாம். புதிய வேலைக்கு முயற்சி செய்யலாம். தடைப்பட்டுவந்த சுபகாரிய நிகழ்ச்சிகளை மீண்டும் தொடங்கலாம். வீட்டில் பிள்ளைகளின் மூலம் சந்தோஷமான செய்தி உங்கள் செவிகளை வந்து சேரும்.
கடகம்:
கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் அதி அற்புதம் வாய்ந்த சந்தோஷம் தரக்கூடிய நாளாக இருக்கப் போகின்றது. நீண்ட நாட்களாக எதிர்பார்த்து கொண்டிருந்த ஒரு நல்ல செய்தி உங்களை வந்து சேரும். இழுபறியாக நடக்கவே நடக்காது என்று கிடப்பில் போட்டு வைத்த விஷயங்கள் கூட இன்றைய தினத்தில் முயற்சி செய்தால் சக்சஸ் தான்.
சிம்மம்:
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் கொஞ்சம் மந்தமான நாளாகத்தான் காணப்படும். வேலை செய்யும் இடத்தில் வேலைப்பளு அதிகரிக்கும். உடல் சோர்வு ஏற்படும். சொந்த தொழிலில் சின்ன சின்ன பிரச்சனைகள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. உங்களுடைய திறமைகளை அடுத்தவர்களுக்கு புரிய வைப்பதற்கு மிகவும் போராட வேண்டிய சூழ்நிலை அமையும். என்னதான் வேலை செய்தாலும் இன்று நல்ல பேர் கிடைப்பது கொஞ்சம் கஷ்டம்தான்.
கன்னி:
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிர்பார்ப்பது ஒன்று. நடக்கப் போவது ஒன்று. ஆக நீங்கள் என்ன நினைத்தாலும் அதற்கு நேர்மறையாக தான் உங்களுடைய நாள் செல்லப் போகின்றது. கோபப்படாதீர்கள், பொறுமையை கையாளுங்கள். அவசரப்பட்டு எந்த முடிவையும் எடுக்க வேண்டாம். பொறுமை இன்றைய நாள் உங்களுக்கு அவசியம் தேவை.
துலாம்:
துலாம் ராசிக்காரர்கள் இன்றைய நாள் நேர்மையுடன் நடந்து கொள்ளப் போகிறீர்கள். எந்த ஒரு முயற்சியை மேற்கொண்டாலும் அதில் கண்ணியம் கட்டுப்பாடு என்று ரொம்ப ஸ்டிட்டா நடக்க போறீங்க. வேலை செய்யும் இடத்தில் கொஞ்சம் அனுசரணை தேவை. அனாவசியமாக அடுத்தவர்களால் உங்கள் மீது சுமத்தப்பட்ட வீண் பழி சொல் இன்று மறைந்துவிடும். குடும்பத்தில் ஒற்றுமையான சூழ்நிலை நிலவும்.
விருச்சிகம்:
விருச்சிக ராசி காரர்களுக்கு இன்றைய நாள் சோம்பேறித்தனமான நாளாக இருக்கப் போகின்றது. எல்லா வேலையையும் நாளைக்கு பார்த்துக் கொள்ளலாம் என்று நினைப்பீர்கள். ஆனால் இன்றைக்கு நீங்கள் என்ன வேலை செய்ய வேண்டுமோ, அந்த வேலையை செய்து முடிப்பது தான் நல்லது என்பதையும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். ஆரோக்கியத்தில் கொஞ்சம் கவனம் தேவை.
தனுசு:
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நினைத்ததை அடைய கூடிய வாய்ப்புகள் கிடைக்கக்கூடிய நாளாக இருக்கப் போகின்றது. நீண்டநாள் ஆசை எதுவாக இருந்தாலும், அந்த ஆசை நிறைவேற இன்று முயற்சிகளை மேற்கொள்ளலாம். வேலை செய்யும் இடத்தில் மேலதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள். கணவன் மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும்.
மகரம்:
மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மகிழ்ச்சியான நாளாக இருக்கப் போகின்றது. வாழ்க்கை துணையின் கையால் எதிர்பாராத பரிசுகள் கிடைப்பதற்கும் நிறையவே வாய்ப்புகள் உள்ளது. குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். வேலை செய்யும் இடத்தில் எதிர்பாராத நல்ல முன்னேற்றம் ஏற்படுவதற்கு நிறைய வாய்ப்பு உள்ளது. வெளியிடங்களுக்கு செல்லும் போது மட்டும் சற்று கவனத்தோடு இருங்க. வண்டி வாகனம் ஓட்டும்போது ஹெல்மெட் அணிந்து கொள்வது நல்லது.
கும்பம்:
கும்ப ராசிக்காரர்கள் நீண்ட நாட்களாக இருந்து வந்த குழப்பங்களிலிருந்து தெளிவு பெறுவீர்கள். இந்த வேலையை செய்யலாமா செய்யக்கூடாதா என்று சற்று தடுமாற்றத்துடன் இருந்திருப்பீர்கள். இனி அந்த தடுமாற்றம் இருக்காது. உங்கள் வாழ்க்கை பாதை பிரகாசமாக இருக்கிறது. கடன் வாங்குவதை குறைத்துக் கொண்டால் வாழ்க்கையில் முன்னேறி விடலாம்.
மீனம்:
மீன ராசிக்காரர்களுக்கு இந்த நாள் உற்சாகம் தரக்கூடிய நாளாக இருக்கப் போகின்றது. எல்லா வேலையையும் சுறுசுறுப்பாக முடிக்கப் போகிறீர்கள். நாளை செய்யக்கூடிய வேலையை இன்றைய செய்துவிட்டு, நாளை ஓய்வு எடுத்துக் கொள்ளப் போகிறீர்கள். அந்த அளவிற்கு சுறுசுறுப்பு இருக்கும் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். வாழ்க்கையில் சாதிக்க வேண்டும் என்ற வெறி இனி உங்களுக்கு வரும் வந்துவிடும்.