மேஷம்:
மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் சுகம் தரும் பலன்கள் காத்திருக்கின்றன. கணவன் மனைவிக்குள் நெருக்கம் கூடும். சுபயோக முயற்சிகளில் தன லாபம் உண்டு. சுய தொழிலில் உள்ளவர்களுக்கு ஆடம்பர பொருள் சேர்க்கை ஏற்படும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் எதிரிகளிடம் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.
ரிஷபம்:
ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதிர்பார்த்தது நினைத்த வேகத்தில் நடக்கும் அற்புதமான நாளாக இருக்கிறது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு விமர்சனங்கள் அதிகரிக்கலாம். சுய தொழிலில் லாபம் காண்பீர்கள். புதிய முயற்சிகளுக்கு அதிக தொகையை ஈடுபடுத்தாமல் இருப்பது நல்லது. குடும்பத்தில் மனதில் உள்ளதை வெளிப்படையாக பேசுவது நல்லது.
மிதுனம்:
மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் இன்பம் காணக்கூடிய நல்ல நாளாக இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு அரசு வழி காரியங்களில் அனுகூல பலன்கள் கிடைக்கும். கணவன் மனைவி ஒற்றுமையில் குறைவிருக்காது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உரிமையை மீட்டெடுப்பதில் சிரமங்கள் ஏற்படலாம்.
கடகம்:
கடகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய செல்வாக்கு அதிகரிக்க கூடிய நல்ல நாளாக இருக்கிறது. குடும்பத்துடன் வெளியிட பயணங்கள் மேற்கொள்ள வாய்ப்புகள் உண்டு. சுய தொழிலில் உள்ளவர்களுக்கு எதிர்பார்ப்புகள் பூர்த்தியடையும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் மறைமுக எதிரிகளை சமாளிக்க வேண்டி வரும் முன்கூட்டியே எச்சரிக்கையாக இருப்பது நல்லது.
சிம்மம்:
சிம்மத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் செய்யும் சிறு சிறு செயல்களும் மிகப்பெரியதாக பலன்களை காணும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு ஏற்றம் தரக்கூடிய அமைப்பாக இருக்கிறது. உத்தியோகத்தில் உள்ளவர்கள் நீண்ட நாள் பிரச்சனைகளை சந்திப்பீர்கள். ஆரோக்கியத்தில் அக்கறை கொள்ளுங்கள்.
கன்னி:
கன்னியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய பொறுப்புகள் அதிகரிக்க கூடும் என்பதால் கவனத்துடன் இருப்பது நல்லது. சுய தொழிலில் உள்ளவர்கள் தேவையல்லாதவர்களிடம் வாக்குவாதங்களை தவிர்க்க வேண்டும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு சகா போட்டியாளர்களின் ஒத்துழைப்பு உற்சாகத்தை கொடுக்கும் வண்ணம் அமையப் போகிறது.
துலாம்:
துலாத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய துணிச்சல் மிகுந்த செயல்கள் நல்ல வாய்ப்புகளை அள்ளிக் கொடுக்கும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு எண்ணிய எண்ணமெல்லாம் ஈடேறும் இனிய நாளாகும். சுப காரிய தடைகள் விலகி மனதிற்கு பிடித்தவர்களை மணக்கும் வாய்ப்புகள் அமையும். உத்தியோகஸ்தர்கள் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது.
விருச்சிகம்:
விருச்சிகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய சொந்த முயற்சிகள் அனுகூல பலன் கொடுக்கும். கணவன் மனைவி ஒற்றுமையில் விரிசல் விழலாம் கவனம் தேவை. உத்தியோகத்தில் உள்ளவர்கள் நவீன உபகரணங்களை வாங்கும் யோகம் உண்டு. சுய தொழிலில் உள்ளவர்களுக்கு புதிய விஷயங்களை கற்றுக் கொள்ளும் வாய்ப்புகள் அமையும்.
தனுசு:
தனுசில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் நினைத்ததை அடைவதில் இடையூறுகள் ஏற்படலாம். கணவன் மனைவி அன்பில் அக்கறை அதிகரிக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு பணத்தடை ஏற்பட வாய்ப்புகள் உண்டு. உற்றார் உறவினர்களின் ஆதரவு குறையும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு நண்பனே துரோகி ஆகலாம் கவனம் தேவை.
மகரம்:
மகரத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் மங்களகரமான நினைவுகள் பெற வாய்ப்புகள் உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்கள் எதிர்பாராத திடீர் தொலைதூர இடங்களுக்கு பயணம் செய்யக்கூடிய சந்தர்ப்பம் உருவாகலாம். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு தங்கள் திறமையை மேலும் மெருகேற்றிக் கொள்ள முயற்சி செய்வது நல்லது. ஆரோக்கியத்தில் இருந்து வந்த தடைகள் விலகும்.
கும்பம்:
கும்பத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய குடும்பப் பொறுப்புகள் அதிகரிக்க வாய்ப்புகள் உண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்கள் தேவையற்றவின் முயற்சிகளை கைவிடுவது உத்தமம். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மேலதிகாரிகளிடம் சாதுரியமாக பேசும் பேச்சாற்றல் தேவை. விடாமுயற்சி உங்கள் தன்னம்பிக்கையை மேலும் அதிகரிக்கும்.
மீனம்:
மீனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய அறிவாற்றல் அதிகரித்து காணப்படும். சமயோசித புத்தி உங்களுக்கு நன்மைகளை வழங்கும். கணவன் மனைவி உறவுக்கு இடையே மீண்டும் புதிய புரிதல் உருவாகும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பாராத திருப்பங்கள் புதிய வாய்ப்புகளை பெற்றுக் கொடுக்கும். சமூக அக்கறை அதிகரிக்கும்.