மேஷம்:
மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் பாராட்டுகள் குவியக்கூடிய நல்ல நாளாக இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு நீண்டநாள் தடைபட்டுக் கொண்டிருந்த காரியம் முடிவுக்கு வரும். சிரமமான வேலை களையும் அலைச்சல் இன்றி சுலபமாக செய்து முடிக்கக் கூடிய வாய்ப்பு உண்டு.
ரிஷபம்:
ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய கோபத்தை தவிர்த்து பொறுமை காப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு பாசப்பிணைப்பு கூடும். குடும்பத்தில் சகோதர சகோதரிகளுக்கும் இருந்து வந்த மனக்கசப்புகள் தீரும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு வீண் அலைச்சல் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் இருப்பதால் முன்னெச்சரிக்கையுடன் செயலாற்றுவது நல்லது.
மிதுனம்:
மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய திறமையை வெளிக்கொணர கூடிய நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு எதிர்ப்புகள் வலுவாகும் என்பதால் கவனம் தேவை. எடுக்கக்கூடிய முடிவுகள் உறுதியாக இருப்பது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு அமைதி தேவை. ஆரோக்கியத்தில் கவனம் இருப்பது நல்லது.
கடகம்:
கடகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய இறைநம்பிக்கை அதிகரிப்பதற்கு வாய்ப்புகள் உண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு சோர்வு காணப்படலாம். கொடுக்கல் வாங்கலில் இருந்து வந்த சிறு சிறு பிரச்சனைகள் நீங்கும். பழைய பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு நண்பர்களுடைய ஆதரவு தக்க சமயத்தில் கிடைக்கும்.
சிம்மம்:
சிம்மத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் சாந்தத்துடன் இருக்க வேண்டிய நல்ல நாளாக இருக்கிறது. உள்மனதில் இருந்து வந்த குழப்பங்கள் தீரும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு எத்தகைய தடைகளையும் தாண்டி ஏற்றம் காணக்கூடிய நல்ல அமைப்பாக இருக்கிறது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மனோதிடம் கூடும். ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள்.
கன்னி:
கன்னியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய வரவை விட செலவு அதிகம் இருப்பதால் கூடுமானவரை எச்சரிக்கையாக இருப்பது நல்லது. எந்த ஒரு முக்கிய முடிவுகளையும் தாமதம் செய்வது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு பாராட்டுகள் குவியும். உங்களுடைய திறமைகளை மேலும் மெருகேற்றிக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உயர்வு உண்டு.
துலாம்:
துலாத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய புகழ் அதிகரிக்கக் கூடிய வாய்ப்புகள் உண்டு. எவ்வளவு விமர்சனங்களையும் தாண்டிய முன்னேற்றம் இருக்கும். கணவன் மனைவி இடையே இருக்கும் நெருக்கம் அதிகரிக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு மறதி ஏற்படுவதற்கு வாய்ப்புகள் இருப்பதால் முன்னெச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. ஆரோக்கியத்தில் அக்கறை கொள்ளுங்கள்.
விருச்சிகம்:
விருச்சிகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் மகிழ்ச்சியுடன் காணக்கூடிய நல்ல நாளாக இருக்கிறது. தொட்டதெல்லாம் துலங்கும் அற்புதமான நாள் என்பதால் தடைகள் விலகி வெற்றி கிடைக்கும். சுபகாரிய முயற்சிகளில் அதிர்ஷ்டம் உண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு உயர்வு காணப்படும். உத்தியோகஸ்தர்களுக்கு தேவையற்ற எதிர்ப்புகள் வலுவாக வாய்ப்புகள் உண்டு எனவே கவனம் தேவை.
தனுசு:
தனுசில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய லாபம் அதிகரிக்க கூடிய நல்ல நாளாக இருக்கிறது. பணம் பல வழிகளிலும் வந்து உங்கள் பாக்கெட்டை நிரப்பும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு வரவுக்கு ஏற்ப செலவுகளும் வரும். உத்யோகத்தில் உள்ளவர்களுக்கு மனதில் நிறைவு ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு. புதிய நண்பர்களின் அறிமுகம் உற்சாகத்தைக் கொடுக்கும்.
மகரம்:
மகரத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய துணிச்சலான முடிவுகள் நன்மைகளை அளிக்கும் எனவே தைரியமாக இருப்பது நல்லது. புதிய சொத்துக்கள் வாங்கும் முயற்சிகளில் கவனம் தேவை. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ள அவர்களுக்கு கிடைக்க வேண்டிய இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு இருந்து வந்த கவலைகள் அகலும். வேலையில்லாதவர்களுக்கு திடீர் அதிர்ஷ்டம் ஏற்படும்.
கும்பம்:
கும்பத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய ஆதரவு பெருக கூடிய நல்ல நாளாக இருக்கிறது. கணவன் மனைவி இடையே கருத்து மோதல் ஏற்பட லாம். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு நற் செயல் புரிவதன் மூலம் நன்மைகள் நடக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பொறுமை தேவை. தேவையற்ற வார்த்தைகளை பிரயோகிப்பதில் கவனம் தேவை. ஆரோக்கியம் மேம்படும்.
மீனம்:
மீனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய பணியில் கூடுதல் அக்கறையுடன் இருப்பது நல்லது. உங்கள் உடன் இருப்பவர்களை உங்களை ஏமாற்றுவதற்கு வாய்ப்புகள் இருப்பதால் சமயோசித புத்தி தேவை. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு முயற்சி திருவினையாக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு தேவையற்ற மன பயம் அதிகரிக்கும் என்பதால் கவனம் தேவை. குடும்பப் பொறுப்புகள் அதிகரிக்கக்கூடும்