மேஷம்:
மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் திடீர் அதிர்ஷ்டம் வரும் இனிய நாளாக இருக்கிறது. சுயதொழில் செய்பவர்களுக்கு எதிர்பார்க்கும் லாபம் கிடைக்கும். வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு விருத்தி உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் குடும்பத்துடன் நேரத்தை செலவிடுவீர்கள். உற்றார் உறவினர்களுடன் இருந்து வந்த பகை மாறும்.
ரிஷபம்:
ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் செய்யும் செயல்களுக்கு ஏற்ப பலன்களும் கிடைக்கும். தீராப் பகை தீர கூடிய வாய்ப்புகள் அமையும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு வரவு செலவு சிக்கல்கள் தீரும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பாராத அலைச்சல் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு கவனம் தேவை.
மிதுனம்:
மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நன்மைகள் கிடைக்க கூடிய நல்ல நாளாக இருக்கிறது. நீங்கள் செய்த புண்ணியத்திற்கு உரிய பலன்களை பெறுவீர்கள். கணவன் மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு விடாமுயற்சி நல்ல வெற்றியை கொடுக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பாராத பரிசுகள் கிடைப்பதற்கு வாய்ப்புகள் உண்டு.
கடகம்:
கடகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் வரவைக் காட்டிலும் செலவு அதிகரிக்க கூடிய வாய்ப்பு உண்டு. குடும்பத்தில் இருப்பவர்களுடன் தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்த்துக் கொள்வது நல்லது. எதிர்பாராத நபர்களின் வருகை உற்சாகத்தை கொடுக்கும். சுயதொழிலில் விருப்பம் போல ஒப்பந்தங்களை பெறுவீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு அமைதி தேவை.
சிம்மம்:
சிம்மத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் உற்சாகத்துடன் காணப்படுவீர்கள். புதிய தொழில் துவங்கும் எண்ணத்தில் இருப்பவர்களுக்கு சாதக பலன் உண்டு. வியாபாரத்தில் விருத்தி உண்டாகும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் பேராசை பெரு நஷ்டம் என்பதை உணர்ந்து செயல்படுவீர்கள். நண்பர்களின் ஆதரவு கிடைப்பதில் இடையூறுகள் ஏற்படலாம். ஆரோக்கியத்தை கவனியுங்கள்.
கன்னி:
கன்னியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் புதிய ஆர்வம் காணப்படும். கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் நீங்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு ஓய்வு கிடைக்க கூடிய நல்ல நாளாக இருக்கிறது. உத்யோகத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பார்ப்புகள் ஏமாற்றத்தை கொடுக்க வாய்ப்புகள் உண்டு. ஆரோக்கியத்தில் கவனம் கொள்ளுங்கள்.
துலாம்:
துலாத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய பொறுமைக்கு ஒரு சவால் நிறைந்த நாளாக இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு வெற்றி வாய்ப்புகள் அதிகரித்து காணப்படுகிறது. சுபகாரிய தடைகள் விலகும். புதிய சொத்துக்கள் வாங்கும் முயற்சியில் கவனம் தேவை. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு தன்னம்பிக்கை அதிகரிக்கும். திடீர் அதிர்ஷ்டம் உண்டு.
விருச்சிகம்:
விருச்சிகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்கள் உடனிருப்பவர்களே உங்களுக்கு எதிராக செயல்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு எனவே கவனம் தேவை. கணவன் மனைவி இடையே இருக்கும் பனிப்போர் நீங்கும். குடும்பத்திலும் வெளி இடத்திற்கு செல்வதற்கு வாய்ப்புகள் உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்கள் பயணங்களின் மூலம் அனுகூல பலன்கள் பெறலாம்.
தனுசு:
தனுசில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுக்கு சோர்வு அதிகரிக்க வாய்ப்புகள் உண்டு என்பதால் தேவையான ஓய்வு எடுத்துக் கொள்வது நல்லது. கணவன் மனைவியிடையே சிறுசிறு சண்டை சச்சரவுகள் வந்து நீங்கும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு இதுவரை இருந்து வந்த பிரச்சினைகள் நீங்கி ஆதாயம் காணக்கூடிய நல்ல வாய்ப்பு உண்டு. உத்தியோகஸ்தர்களுக்கு நன்மைகள் நடக்கும்.
மகரம்:
மகரத்தில் பிறந்தவர்கள் இந்த நாள் தேவையற்ற முன் கோபத்தை தவிர்த்து கொள்வதால் அனுகூலமான பலன்களை பெறலாம். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்கள் இதுவரை தொல்லை கொடுத்து வந்த எதிரிகள் செய்யும் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு சாந்தம் தேவை. மனதை அமைதிப்படுத்த யோகா, தியானம் போன்றவற்றை முயற்சிக்கலாம்.
கும்பம்:
கும்பத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய உழைப்பு மற்றவர்களுக்கு பயன்படும் படி செயல்படுவது நல்லது. குடும்பத் தேவைகளை எளிதாக பூர்த்தி செய்வீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு ஏமாற்றம் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு எனவே கவனம் தேவை. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு கடமையில் கூடுதல் அக்கறை ஏற்படும்.
மீனம்:
மீனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய புகழ் அதிகரிக்கக் கூடிய நல்ல வாய்ப்புகள் உண்டு. வேலை தேடி அலைந்து கொண்டிருப்பவர்கள் இஷ்டமான வேலை அமையும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு வரவைக் காட்டிலும் செலவு அதிகரிக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு எதிர்வரும் பிரச்சினைகளை சமாளிக்கும் துணிச்சல் ஏற்படும்.