மேஷம்:
மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதிர்பாராத சுப செய்திகள் கிடைக்க இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு எவ்வளவு இன்னல்கள் வந்தாலும் அதை சமாளிக்க கூடிய தைரியம் வேண்டும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு தந்தைவழி உறவினர்கள் மூலம் ஆதாயம் உண்டு. பொருளாதார ஏற்றம் சீராக இருக்கும். ஆரோக்கிய ரீதியான பிரச்சினைகளை உடனுக்குடன் கவனிப்பது நல்லது.
ரிஷபம்:
ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் எதையும் பொறுமையாக கையாள வேண்டிய ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் உங்கள் பலத்தை அதிகரிக்க கூடிய நல்ல நாளாக இருக்கும். திட்டமிட்ட காரியங்கள் திட்டமிட்டபடி நடக்கும். கணவன்-மனைவி இடையே விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. சுயதொழிலில் இருப்பவர்களுக்கு மனசோர்வு ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு எனவே தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ளுங்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு கடன் நெருக்கடி வருவதற்கு வாய்ப்புகள் உண்டு.
மிதுனம்:
மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் ஆடம்பர செலவுகள் அதிகரிக்க வாய்ப்புகள் உண்டு. ஆசைகளை கட்டுப்படுத்துவது நல்லது. குடும்ப உறவுகளுக்கு இடையே இருந்து வந்த மனக்கசப்புகள் கொஞ்சம் கொஞ்சமாக நீங்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு கடினமான விஷயங்கள் கூட எளிதாக முடியும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு முக்கிய விஷயங்கள் தாமதப்படும். உணவு கட்டுப்பாட்டை மேற்கொள்ளுங்கள்.
கடகம்:
கடகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் ராசியாதிபதி ஆதிக்கம் உங்களுக்கு நற்பலன்களை வழங்க இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு நண்பர்களுடைய உதவி கிடைக்கும். கூட்டுத் தொழில் புரிபவர்களுக்கு செயல் ஆற்றல் அதிகரிக்க வாய்ப்புகள் உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்கள் திட்டமிட்டு செயல்பட்டால் லாபம் அதிகரிக்கும். பெண்கள் எதிலும் அகலக்கால் வைக்காமல் சிந்தித்து செயல்படுவது நல்லது.
சிம்மம்:
சிம்மத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் அளவுக்கு மேல் எதிர் பார்ப்பதை குறைத்துக் கொள்வது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்கள் ஏமாற்றத்தை சந்திக்க நேரும் என்பதால் சமயோசிதமாக எச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது. கணவன் மனைவியிடையே சிறுசிறு வாக்குவாதங்கள் வந்து செல்லும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் இன்று தேவையற்ற தலைவலியை நீங்களே இழுத்து போட்டுக் கொள்ளாதீர்கள். பொறுமையை கையாளுங்கள்.
கன்னி:
கன்னியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் திடீர் பயணங்கள் மேற்கொள்வதற்கு சாத்தியக்கூறுகள் உண்டு. முன்பின் தெரியாதவர்களிடம் இருந்து எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு அவசர முடிவுகள் ஆபத்தை கொடுக்கும். துறைசார் நிபுணர்களின் ஆலோசனை பெறுவது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு இட மாற்றம் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு. புதிய விஷயங்களில் ஈடுபடுவதற்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும்.
துலாம்:
துலாத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய பிரச்சனைகள் தீர்வதற்கு பல வழிகள் தோன்றும் நல்ல நாளாக இருக்கிறது. அறிவாற்றலுடன் செயல்பட்டால் உங்களுடைய இலக்கை நோக்கி நீங்கள் பயணிக்கலாம். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்கள் பல சிரமங்களை எதிர்கொள்ள நேரும். வாடிக்கையாளர்களின் மனம் கவர புதிய யுக்திகளை கையாளுவது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு புதிய செயலில் ஈடுபடும் பொழுது எச்சரிக்கை தேவை.
விருச்சிகம்:
விருச்சிகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் சாதகமற்ற அமைப்பு என்பதால் பொறுமையை கையாளுவது நல்லது. எடுத்தோம் கவிழ்த்தோம் என்று எதையும் செய்ய வேண்டாம். கணவன் மனைவி இடையே தேவையற்ற பேச்சுக்கள் வேண்டாம். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு சுயமரியாதையை சீண்டும் வகையில் சில மோசமான நிகழ்வுகள் நடக்க வாய்ப்புகள் இருப்பதால் கவனம் தேவை. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு இறை ஆற்றல் பெருகும்.
தனுசு:
தனுசில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் இயன்ற வரை மௌனம் காப்பது நல்லது. தேவையற்ற பேச்சுக்களை தவிர்த்து அத்தியாவசியமாக பேசுவது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு திடீர் பயணங்கள் ஏற்படும். பயணங்கள் மூலம் அனுகூல பலன்கள் உண்டு என்பதால் கவலை கொள்ளத் தேவையில்லை. உத்தியோகத்தில் இருப்பவர்கள் பிரதிபலன் பார்க்காமல் உங்களுடைய கடமைகளை சரியாக செய்வது நல்லது.
மகரம்:
மகரத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய சுற்றத்தாரின் எதிர்ப்பை மீறி செயல்பட வேண்டிய கட்டாயம் ஏற்படலாம். பல்வேறு விமர்சனங்களை தவிர்த்து உங்களுடைய இலக்கை நோக்கி பயணியுங்கள். வெற்றி உங்களைத் தேடி தானாகவே வந்து சேரும். சுய தொழிலில் இருப்பவர்களுக்கு அரசியல் சார்ந்த விஷயங்களில் கவனம் தேவை. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு புதிய நண்பர்களின் அறிமுகம் கிடைக்கும். ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்துங்கள்.
கும்பம்:
கும்பத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் தடுமாற்றம் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் இருப்பதால் மனதை ஒருமுகப்படுத்த முயற்சி செய்வது நல்லது. விட்டு சென்ற உறவுகளின் நினைவுகளை தவிர்த்து விடுங்கள். உங்கள் வேலையில் மும்முரமாக ஈடுபடுங்கள். கணவன் மனைவி இடையே ஒற்றுமை ஓங்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு இறைவழிபாட்டில் மீது கூடுதல் அக்கறை தேவை. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மன அமைதி ஏற்பட தியானம், யோகா போன்றவற்றை செய்யலாம்.
மீனம்:
மீனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதையும் நீங்கள் சுலபமாக பெற்றுவிட முடியாது போராடித்தான் பெற வேண்டியிருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு மனதில் இருக்கும் வன்மத்தை தவிர்ப்பது நல்லது. கோபம் உங்களை நீங்களே அழித்துக் கொள்வதற்கு சமம் ஆகும். சுய தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு எதிர்பாராத வகையில் தன லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு எதிர்மறை ஆற்றல் அதிகரிக்க வாய்ப்புகள் இருப்பதால் மனதை அமைதிப்படுத்துங்கள்.